For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பழிவாங்க திட்டம்.. காஷ்மீரில் 250 பாக்.தீவிரவாதிகள் ஊடுருவல்?

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

காஷ்மீரில் யூரி ராணுவ தலைமையகம் மீது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகள் மீது, கடந்த மாதம் 29-ம் தேதி அதிகாலை இந்திய ராணுவத்தினர் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 250 militants hiding in Kashmir Valley

இதற்கு தீவிரவாத அமைப்புகள் பதிலடி கொடுக்க இந்தியா மீது தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்பறப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நாடு முழுவதும் உச்சகட்ட உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. லஷ்கர் இ தொய்பா , ஜேசி முகமது , ஹிஸ்புல் முகாஜுதீன் போன்ற அமைப்பை சேர்ந்த 250 தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஊடுருவி இருப்பதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து எல்லை கட்டுப்ப்பாடு பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட நகரங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுளள்ன. பண்டிகை காலம் என்பதால் தீவிரவாதிகள் அதனை சீர்குலைக்க கூடும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்திலும் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

English summary
At least 250 terrorists belonging to three Pakistan-based terror groups are active in the Kashmir valley, trying to target security forces to "avenge" the surgical strikes carried out by the Indian Army in PoK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X