For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அய்யயோ.. 30,000 பெண்கள் 60,000 கணவர்களை வைத்துள்ளனரா? அமைச்சரின் அபத்த பேச்சால் சர்ச்சை

30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர் என ஒடிசா அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

புவனேஸ்வர் 30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர் என ஒடிசா அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களும் அமைச்சர்களும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்கிகொள்வது வாடிக்கையாகிவிட்டது.

இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஏழரையை கூட்டியுள்ளார். ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஒடிசா அமைச்சர்

ஒடிசா அமைச்சர்

இவரது அமைச்சரவையில் வேளாண் துறை அமைச்சராக இருப்பவர் பிரதீப் மஹரதி. ஒடிசா சட்டசபைக்கு இதுவரை 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பிரதீப் மஹதி.

60 ஆயிரம் கணவர்கள்

60 ஆயிரம் கணவர்கள்

இவர் வீடியோ ஒன்றில் 30 ஆயிரம் பெண்கள் 60 ஆயிரம் கணவர்களை வைத்திருக்கின்றனர் என கூறியுள்ளார். அவரது இந்த சர்ச்சை பேச்சு வீடியோ வைரலாகியுள்ளது.

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சரின் வீடு முன் பாஜக மகளிர் அணி தலைவர் பரீடா தலைமையில் நேற்று போராட்டம் நடைபெற்றது. பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பிரதீப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மன்னிப்பு கேட்க முடியாது

மன்னிப்பு கேட்க முடியாது

அப்போது ஆவேசமடைந்த சிலர் அமைச்சரின் வீட்டிற்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதீப், பெண்கள் மனம் புண்படும்படியாக நான் பேசியதில்லை. அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.

நான் அப்படி கூறவில்லை

நான் அப்படி கூறவில்லை

எனது அறிக்கையை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். சத்யாவதி தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 30 ஆயிரம் பெண்கள் மற்றும் மற்றொரு 30 ஆயிரம் கணவர்கள் என 60 ஆயிரம் பேர் வருவர் என கூறினேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எதிர்ப்பு

பாஜக எதிர்ப்பு

அமைச்சர் என்னதான் விளக்கம் அளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சரின் பேச்சு பெண்களை இழிவுபடுத்தும் வகையில்தான் இருந்தது என பாஜக மகளிர் அணி தலைவர் பரீடா தெரிவித்துள்ளார்.

English summary
Odisha minister Pradeep Maharathy says 30000 woman having 60000 husbands. His speech became controversy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X