For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷீலா தீட்சித்தின் டெல்லி வீட்டில் 31 ஏ.சி, 15 ஏர் கூலர்கள், 25 ஹீட்டர்கள்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கேரளாவின் ஆளுநராக இருக்கும் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் அதிகாரப்பூர்வ இல்லம் எவ்வளவு சொகுசாக இருக்கிறது என்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

1998ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை டெல்லி முதல்வராக இருந்தவர் ஷீலா தீட்சித். டெல்லி மோதிலால் நேரு மார்க் பகுதியில் அவரது அதிகாரப்பூர்வ இல்லம் இருக்கிறது.

31 ACs, 15 dessert coolers, 25 heaters in Sheila Dikshit residence

இந்த இல்லத்தில் மின்சாதனங்களைப் பொருத்துவதற்கு மட்டும் ரூ16,81,119 செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

அப்படி என்ன மின்சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை.. ஷீலா தீட்சித்தின் வீட்டில் மட்டும் 31 ஏ.சிகள், 15 கூலர்கள், 25 ஹீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம்.

இத்தனை மின்சாதனங்களைப் பொருத்தத்தான் இத்தனை லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார் தகவல் அறியும் உரிமை சட்ட வல்லுநரான சுபாஷ் சந்திரா அகர்வால்.

அத்துடன் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஷீலா தீட்சித் மீது நடவடிக்கை எடுகக் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Information provided under the Right to Information Act (RTI) revealed not-so-austere lifestyle of former Delhi Chief Minister Sheila Dikshit. A large fleet of electrical appliances, including 31 air conditioners, 15 dessert coolers and 25 heaters, were installed at her official residence - 3, Motilal Nehru Marg in the national capital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X