Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 18 நாட்களில் மட்டும் படுகொலை, சிறுமி பலாத்காரம் உள்ளிட்ட 5 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு மம்தா பானர்ஜி முதல்வராக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக மேற்கு வங்காளத்தில் கொலை, வன்முறை, பலாத்காரம் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பான விசாரணைக்கு மாநில அரசு சார்பில் சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விசாரணை சரியில்லை எனக்கூறி என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. இதனால் சிபிஐ வசம் விசாரணை செல்கின்றன.

சிறுமி கூட்டு பலாத்காரம்

சிறுமி கூட்டு பலாத்காரம்

அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் ஹன்ஸ்காலி என்ற இடத்தில் 14 வயது நிரம்பிய 9ம் வகுப்பு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதார். அதன்பிறகு அவர் இறந்தார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவரின் மகன் மீது மாணவியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

சிபிஐக்கு மாற்றம்

சிபிஐக்கு மாற்றம்

இதற்கிடையே மம்தா பானர்ஜியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட மாணவி பலாத்காரம் செய்யப்பட்டாரா? இல்லை காதல் விவகாரத்தில் கர்ப்பம் ஆனாரா?'' என கேள்வி எழுப்பி இருந்தார். இது சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணை சிபிஐக்கு நேற்று மாற்றம் செய்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

18 நாளில் 5 வழக்குகள் மாற்றம்

18 நாளில் 5 வழக்குகள் மாற்றம்

இந்நிலையில் தான் கடந்த 18 நாளில் மட்டும் மேற்கு வங்க மாநிலத்தில் இந்த வழக்கு உள்பட மொத்தம் 5 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் கொல்கத்தா உயர்நீதமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விபரம் வருமாறு:

முதல் வழக்கு

முதல் வழக்கு

மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட் அருகே மார்ச் 21ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேக் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராம்பூர்ஹாட் அருகே உள்ள போக்டுய் கிராமத்தில் வன்முறை ஏற்பட்டது. சிலர் வீடுகளுக்கு தீவைத்தனர். இதில் 8 பேர் எரித்து கொல்லப்பட்டனர். முன்னதாக இவர்கள் தாக்கப்பட்டதும் தெரியவந்தது. இது பல்வேறு அனுமானங்களை எழுப்பியது. இதனால் இந்த வழக்கு மார்ச் 25ல் சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2வது வழக்கு

2வது வழக்கு

புருலியா மாவட்டம் ஜல்டா நகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் தபான் காண்டு சுட்டு கொல்லப்பட்டார். இந்த நகராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ள நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் தலா 5 இடங்களிலும், 2 இடங்களிலும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்தில் இந்த கொலை நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொலையில் போலீசாருக்கும், திரிணாமுல் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக கூறி தபான் காண்டுவின் குடும்பத்தினர் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து ஏப்ரல் 4ல் சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

 3வது வழக்கு

3வது வழக்கு

மார்ச் 21ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேக் கொலை வழக்கு தொடர்பான விசாரைணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. போக்டுய் 8 பேர் படுகொலையுடன் தொடர்புடைய வழக்கு என்பதால் சிபிஐயிடம் வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 8ல் பிறப்பித்தது.

4, 5வது வழக்கு

4, 5வது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் தபான் காண்டு கொலையை நேரில் பார்த்த சாட்சியான பைஷ்னாப் ஏப்ரல் 6ல் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். சாட்சியை அழிக்கும் நோக்கில் எதிரிகள் கொலை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தபான் காண்டு கொலை வழக்கை சிபிஐ விசாரிப்பது போல் இந்த வழக்கும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான உத்தரவு நேற்று காலை பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தான் நாடியா மாவட்டம் ஹன்ஸ்காலி சிறுமி பலாத்கார வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆபத்து எப்படி

ஆபத்து எப்படி


கடந்த 18 நாளில் மட்டும் 5 வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சில வழக்குகளில் திரிணாமுல் கட்சிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மம்தா பானர்ஜியின் ஆட்சியை கலைக்க வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சியினர் வியுறுத்தி வருகின்றனர். இது மம்தா பானர்ஜிக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+