For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸுக்கு 60- பாஜகவுக்கு 150 இடங்கள்தான் கிடைக்கும்: இது மமதா பானர்ஜி கணிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

60 seats for Congress, 150 for BJP in LS polls, predicts Mamata
டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 60, பாஜகவுக்கு 150 இடங்களும்தான் கிடைக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கணித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மமதா பானர்ஜி கூறியதாவது: நீங்கள் மாநிலத்தில் சிறப்பான ஆட்சியை கொடுத்தால் மத்தியிலும் சிறப்பான ஆட்சியை கொடுக்க முடியும்.

தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள்தான் கிடைக்கும். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிகபட்சம் 150 இடங்கள்தான் கிடைக்கும்.

மத்தியில் நிச்சயமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ தேசிய ஜனநாயகக் கூட்டணியோ ஆட்சி அமைக்கப் போவதில்லை. "கூட்டணி முன்னணி"யின் ஆட்சிதான் அமையும்.

லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கம், திரிபுரா உட்பட மொத்தம் 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். யார் பிரதமர் என்பதை நீங்களோ நானோ தீர்மானித்துவிட முடியாது. ஜனநாயகம்தான் தீர்மானிக்க முடியும்.

என்னுடைய உயரம் எனக்கு தெரியும். எந்த ஒரு பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை.

இவ்வாறு மமதா கூறியுள்ளார்.

English summary
According to Mamata Banerjee, the Congress will scrape just about 60 seats in the forthcoming Lok Sabha elections while the principal opposition Bharatiya Janata Party will manage 150 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X