For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைதராபாத்தில் பேய் மழைக்கு 7 பேர் பலி - மக்களுக்கு எச்சரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கனமழை கொட்டி வருகிறது. கனமழைக்கு இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் இன்று பெய்த பேய் மழையினால் மக்கள் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஹைதராபாத் நிர்வாகத்தால் எச்சரிக்கை விடப்பட்டது.

7 Dead Heavy Rains in Hyderabad

ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலையில் 2 மணி நேரத்தில் 95.75 மி.மீ மழை பெய்துள்ளது. பல தெருக்களில் அளவுக்கு அதிகமான நீர் சூழப்பட்டதால் வாகனங்கள் மிதந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முசீராபாத் பகுதியில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். ராமந்த்பூர் உப்பால் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். ஹைதராபாத்தில் ஒரே நாளில் மழைக்கு 7 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேய் மழை கொட்டி வருவதால் மக்கள் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என ஹைதராபாத் நிர்வாகத்தால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

English summary
7 died for Heavy rain is creating panic in twin cities of Hyderabad and Secunderabad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X