For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடந்த வருடத்தில் 75,000 இளைஞர்கள் மரணம்- எல்லாமே சாலை விபத்தில்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் சிக்கி கிட்டதட்ட 75 ஆயிரம் இளைஞர்கள் மரணமடைந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகிறது.

தற்போது சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து ஆராய்ச்சிப் பிரிவு சாலை விபத்து குறித்து ஒரு அறிக்கை தயார் செய்துள்ளது.

75 இளைஞர்கள் மரணம்:

75 இளைஞர்கள் மரணம்:

இதில் கடந்த ஆண்டு 75 ஆயிரம் இளைஞர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் 15 வயது முதல் 34 வயதுக்குள்ளவர்கள் ஆவார்கள்.

பெருமளவில் ஆண்கள்தான்:

பெருமளவில் ஆண்கள்தான்:

இதில் பெரும்பாலானோர் ஆண்கள். மொத்த எண்ணிக்கையில் இது 53.8 சதவீதமாகும். 35 முதல் 64 வயதுடையவர்கள் 35.7 சதவீதம் பேர் மரணமடைந்துள்ளார்கள்.

அதிகரிக்கும் விபத்துகள்:

அதிகரிக்கும் விபத்துகள்:

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தோடு 2014 இல் அதிகமான அளவில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு 8.46 லட்சமாக இருந்த விபத்து 2014 இல் 4.89 லட்சமாக அதிகரித்துள்ளது.

14 மாநிலங்களில் அதிகம்:

14 மாநிலங்களில் அதிகம்:

உத்திர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் உள்பட 14 மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

English summary
India's killer roads claimed the lives of 75,000 people aged between 15 and 34 years last year. Over 82% of these victims were males, according to the Road Accident Report for 2014 prepared by the road transport and highways ministry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X