• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

16 வயது பெண்.. 3 இளைஞர்களின் அராஜகம்.. வீடியோ வெளியிட்ட கொடூரம்.. ஊர் கூடி வெளுத்ததால் பரபரப்பு!

|
  16 வயது பெண்.. 3 இளைஞர்களின் அராஜகம்.. வீடியோ வெளியிட்ட கொடூரம்.. ஊர் கூடி வெளுத்ததால் பரபரப்பு!

  கான்பூர்: 16 வயசு பெண்ணை.. வயக்காட்டுக்கு இழுத்து சென்று.. 3 இளைஞர்கள் கதற கதற நாசம் செய்துள்ளனர். இதை வீடியோவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட.. கொதித்து போன ஊர் மக்கள் பிரம்பாலேயே ஒரு இளைஞரை ஆத்திரம் தீர அடிக்கிறார்கள்.

  வன்கொடுமைகளும், அத்துமீறல்களும் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் முதன்மையாகி வருகிறது உத்திரபிரதேசம். நாளுக்கு நாள் இதன் கொடூரங்கள் பெருகி கொண்டே போகின்றன.

  A 16 year old girl was gang raped by three men near UP

  இப்போதும் அப்படித்தான் ஒரு சம்பவம் தெற்கு பகுதியில் நடந்துள்ளது. அது கிராமம்.. 16 வயது பெண் ஒருத்தி மாட்டுக்கு தீவனம் வாங்க சென்று கொண்டிருந்தாள். அப்போது, முகமது நஸீம் என்ற 20 வயது இளைஞர் அந்த பெண்ணை வழிமறித்து பேசினார்.

  பிறகு என்னென்னமோ சொல்லி, மனதை மாற்றி அப்படியே வயல்வெளிக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார். எதற்காக வயலுக்கு கூப்பிடுகிறார் என்று தெரியாமல் அந்த பெண்ணும் அந்த இளைஞன் பின்னாடியே விழித்து கொண்டு சென்றிருக்கிறாள்.

  நடிகர் விஜய் அற்புதமான கலைஞர்...தமிழக அரசு அரண்டு விட்டது-கே.எஸ்.அழகிரி

  வயலுக்கு போனதும், தன்னுடைய நண்பர்கள் 2 பேரையும் அங்கே வர சொல்லி உள்ளார் முகமது நஸீம். அவர்கள் பெயர் முகமது சோட்கா, முகமது பத்கா என்பது. யாருமில்லா அந்த வயல்காட்டில் 3 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை சீரழித்ததுடன், செல்போனில் வீடியோவும் எடுத்து, இணையத்திலும் பதிவிட்டுள்ளனர்.

  இதைவிட கொடுமை என்னவென்றால், இது பற்றி 3 பேர் மீதும் பாதிக்கப்பட்ட பெண் புகார் தர சென்றால். அதனை போலீசார் ஏற்றுக் கொள்ளவில்லையாம். புகாரை நிராகரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள், தாங்களே தண்டித்துவிடுகிறோம் என்று சொல்லி, முகமது நஸீமை பிடித்து நடுத்தெருவிலேயே பிரம்பால் வெளுத்துவிட்டனர்.

  தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆவேசமாக அந்த இளைஞனை ஊர் மக்கள் அடித்தனர். இதில் இளைஞனின் உடல்நிலை மோசமடைந்தது. இதற்கு பிறகு விஷயம் தெரிந்து போலீசார் விரைந்து வந்து முகமது நஸீமை மீட்டு... கைது செய்து.. பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர். அதேபோல் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  மேலும், பெண் தரப்பில் புகார் தந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு, சம்பந்தப்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

   
   
   
  English summary
  16 year old girl was gang raped by three young men near Up and Public thrashed the accused
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X