ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு எதிரொலி.. முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை கலைக்க மத்திய அரசு முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தை கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி வழங்கிய முதலீடுகளுக்காக, கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

A day after raids on Chidambaram, FIPB set to be abolished

இதை உறுதி செய்ய நேற்று முன்தினம் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் இல்லங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் என்பது வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளை ஆய்வு செய்து, சரியாக இருந்தால் அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்வதுதான். ரூ.600 கோடி வரையிலான முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் கையாளும்.

வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தில், 5 சீனியர் அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். முறைகேடுகளுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் வழி வகுத்துவிட்டதால் இன்னும் ஒரு மாதத்திற்குள் அந்த அமைப்பை கலைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆன்லைன் மூலம், சம்மந்தப்பட்ட அமைச்சகத்திடமே அனுமதி கேட்டு முதலீடு செய்யும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரரசு திட்டமிட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Union Cabinet is likely to do away with Foreign Investment Proposal Board or the FIPB. The decision comes a day after the CBIconducted raids at the residence of former union minister, P Chidambaram and his son Karti in connection with FIPB violations.
Please Wait while comments are loading...