For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரெல்லாம் இல்ல, கொஞ்சம் சமோசாதான் இருக்கு... வாடிக்கையாளருக்கு சமோசா தந்த 'ஓலா'

ஓலா நிறுவனம் தவறாக வசூலித்த பணம் குறித்து டிவிட் செய்தவருக்கு சமோசா அனுப்பி ஆறுதல் தெரிவித்து இருக்கிறது அந்நிறுவனம்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: கப்பார் சிங் என்ற நபர் ஓலாவில் டெல்லி விமான நிலையம் செல்வதற்காக கார் புக் செய்துவிட்டு காத்திருந்து இருக்கிறார். ஆனால் டிரைவர் அதை ஏற்றுக்கொண்டு பிக்கப் செய்ய வராததால் கடைசியில் இந்த புக்கிங் கேன்சல் ஆகியிருக்கிறது.

இதையடுத்து ஓலா நிறுவனம் கப்பார் சிங்கிடம் அபராதமாக பணம் வசூலித்து இருக்கிறது.இந்தக் கண்டு கோபமடைந்த காப்பார் சிங் டிவிட்டரில் ஓலா நிறுவனத்தை குறிப்பிட்டு டிவிட் செய்து இருக்கிறார்.

கடைசியில் ஓலா நிறுவனம் இந்த டிவிட்டை பார்த்துவிட்டு அதற்கு மன்னிப்பு கேட்டு , அவரது வீட்டுக்கு இரண்டு சமோசாக்களை அனுப்பி வைத்து இருக்கிறது.

 ஓலாவில் கார் புக் செய்த கப்பார்

ஓலாவில் கார் புக் செய்த கப்பார்

டெல்லியை சேர்ந்த கப்பார் சிங் என்ற நபர் டிவிட்டரில் மிகவும் பிரபலமானவர். இவர் தனது சகோதரருடன் டெல்லி விமானம் நிலையம் செல்வதற்காக கார் ஒன்றை புக் செய்து இருக்கிறார். ஆனால் கடைசி நேரத்தில் டிரைவர் இந்த புக்கிங்கை ஏற்றுக்கொள்ளாமல் அதை கேன்சல் செய்து இருக்கிறார். பயணம் ரத்து செய்யப்படும் சமயங்களில் ஓலா நிறுவனத்தின் வழக்கப்படி அபராத தொகை பயணிகளிடம் வசூலிக்கப்படும். அதேபோல் இந்த விஷயத்திலும் அபராத தொகை கப்பார் சிங்கிடம் இருந்து வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

கப்பார் டிவிட்டரில் புகார்

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கப்பார் சிங் டிவிட்டரில் எழுதி இருக்கிறார். ஓலா நிறுவனத்தை குறிப்பிட்டு இவர் எழுதியுள்ள இந்த டிவிட்டில் "நேற்று நான் ஓலா நிறுவனத்தில் கார் புக் செய்தேன். அதை டிரைவர் கேன்சல் செய்துவிட்டார். அதற்காக என்னிடம் பணம் வசூலிக்கப்பட்டது. இது எப்படி தெரியுமா இருக்கிறது. கடைக்காரரிடம் சமோசா கேட்டு அவர் இல்லை என்றால் அதற்காக நாம் அவருக்கு 10 ரூபாய் அபராதம் தரவேண்டும் என்பது போல் இருக்கிறது'' என்று காமெடியாக எழுதியிருந்தார். இவர் ஏற்கனவே பிரபலம் என்பதால் இந்த டிவிட் வைரல் ஆனது.

ஓலாவின் சமோசா விடு தூது

இந்த டிவிட் அதிகளவில் பரவியதால் ஓலா நிறுவனம் அந்த நபரிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் அவரிடம் வசூலித்த பணத்தை மீண்டும் அளித்துவிடுவதாக தெரிவித்தது. ஆனால் அதோடு இல்லாமல், கார் புக்கிங் செய்ததில் இருந்த அவர் முகவரியை பார்த்து அதற்கு இரண்டு சமோசாக்களை பார்சல் அனுப்பி இருக்கிறது. அவர் டிவிட்டில் காமெடியாக குறிப்பிட்ட சமோசாவை அந்த நிறுவனம் நிஜமாகவே அவருக்கு பார்சல் அனுப்பி இருக்கிறது.

ஐ போன் கேட்டு இருக்கலாம்

இந்த நிலையில் ஓலாவின் இந்த செயலை பலரும் பாராட்டினாலும் சிலர் அதையும் கலாய்த்து இருக்கின்றனர். அதன்படி சமோசாவை வைத்து காமெடி செய்ததற்கு பதில் ஐ போனை வைத்தோ, தங்க நகைகளை வைத்தோ காமெடி செய்து இருக்கலாம். அதையும் பார்சலாம் அனுப்பி இருந்தாலும் இருப்பார்கள் என வித விதமாக டிவிட் செய்து இருந்தனர்.

English summary
A person called Gabbbar Singh booked a cab in Ola and the driver cancels, but he has charged for cancellation fee. He complained about it twitter and got 2 samosas as the refund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X