For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணப்பெண் வேறு ஒருவருடன் ஓடிப்போக உள்ளார்... பொய்யான வாட்ஸ் ஆப் செய்தியால் கேரளாவில் விபரீதம்

கேரளாவில் நடக்க இருந்த திருமணம் ஒன்று பொய்யான வாட்ஸ் ஆப் செய்தி ஒன்றால் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பொய்யான வாட்ஸ் ஆப் செய்தியால் கேரளாவில் விபரீதம்- வீடியோ

    திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்க இருந்த திருமணம் ஒன்று பொய்யான வாட்ஸ் ஆப் செய்தி ஒன்றால் நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    எர்ணாகுளத்தை சேர்ந்த கல்லூரி பெண் ஒருவருக்கு சில வாரங்களுக்கு முன் துபாயில் வேலை பார்க்கும் உறவுக்காரருடன் நிச்சயம் ஆகியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருந்தது.

    இந்த நிலையில் அந்த பெண் வேறு ஒரு நபருடன் தொடரில் இருப்பதாக இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப்பில் செய்தி பரப்பப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணின் திருமணம் நிறுத்தப்பட்டது.

    புகைப்படம்

    புகைப்படம்

    அந்த பெண்ணும், அவரின் நண்பரும் பேருந்து நிலையம் ஒன்றில் நிற்பது புகைப்படமாக அந்த வாட்ஸ் ஆப் மெசேஜில் அனுப்பப்பட்டுள்ளது. அதோடு ஒரு ஆடியோவும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அந்த பெண் இன்னும் சில தினங்களில் வீட்டைவிட்டு ஓட போகிறார், அவரை கண்டுபிடித்து தண்டனை கொடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    மாப்பிள்ளை

    மாப்பிள்ளை

    இந்த மெசேஜ் அப்படியே எல்லோருக்கும் சென்று பெண்ணின் வீட்டிற்கும் சென்றுள்ளது. அதோடு மாப்பிள்ளையின் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் இருந்த மாப்பிள்ளைக்கும் இந்த தகவல் தெரிந்துள்ளது. இதனால் அந்த மாப்பிள்ளை உடனடியாக திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.

    ஷிஹாப் கைது

    ஷிஹாப் கைது

    இதையடுத்து அந்த பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி இந்த பொய்யான செய்தியை அனுப்பியவர் ஷிஹாப் என்ற அதே பகுதியை சேர்ந்த நபர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷிஹாப் தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த பெண்ணை தெரியவே தெரியாது என்று கூறப்படுகிறது.

    விளையாட்டிற்கு

    விளையாட்டிற்கு

    ஒரு நாள் பேருந்து நிலையத்தில் அந்த பெண்ணும், இன்னொரு ஆணும் நின்றிருந்த போது, விளையாட்டாக புகைப்படம் எடுத்து இவர் இப்படி மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த மெசேஜ் இப்படி எல்லோருக்கும் சென்று கடைசியில் ஒரு திருமணத்தையே நிறுத்தி இருக்கிறது. இப்படி அடிக்கடி விளையாட்டாக போட்டோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் அனுப்புவேன் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    English summary
    A fake Whats App messages stop a marriage in Kerala. The man who sent this message has been arrested by police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X