இதுக்கு நீ செத்தே போயிடலாம்.. காதலனுடன் பேசிய பெண்ணை சரமாரியாக சுட்ட தந்தை.. சகோதரர்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணை அவரது தந்தையும் சகோதரரும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் சம்பால் கிராமத்தை சேர்ந்தவர் ரூபி என்ற 18 வயது பெண் இப்ராஹிம் என்னும் இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

அவரது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூபி தனது காதலர் இப்ராஹிமுடன் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தார்.

தாக்கிய தந்தை, சகோதரர்

தாக்கிய தந்தை, சகோதரர்

இதனைக் கண்ட ரூபியின் சகோதரி இதுகுறித்து தனது தந்தை சம்ரோஸ் மற்றும் சகோதரர் இப்திகர் ஆகியோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ரூபியிடம் சென்ற அவர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.

சரமாரியாக சுட்டனர்

சரமாரியாக சுட்டனர்

ஆனாலும் ஆத்திரம் அடங்காததால் தாங்கள் கொண்டுவந்த துப்பாக்கியால் ரூபியை சரமாரியாக சுட்டனர். இதில் மார்பு மற்றும் முகத்தில் குண்டு பாய்ந்த அவர், ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிடிவாதம் பிடிக்கும் ரூபி

பிடிவாதம் பிடிக்கும் ரூபி

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரூபிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்திலும் இப்ராஹிமை தான் திருமணம் செய்துகொள்வேன் என அவர் பிடிவாதமாக உள்ளார்.

மானத்தையே வாங்கி விட்டாள்

மானத்தையே வாங்கி விட்டாள்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரூபியின் அண்ணி, இப்ராஹிமுடன் செல்வதில் ரூபி பிடிவாதமாக இருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் தங்களின் குடும்ப மானத்தையே வாங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.

செத்தே போயிருக்கலாம்

செத்தே போயிருக்கலாம்

குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டாலும் தான் இப்ராஹிமுடன் தான் செல்வேன் என கூறி வருகிறாள் என்றும் அவர் கூறினார். இதற்கு அவர் செத்தே போயிவிடலாம் என்றுமம் ரூபியின் அண்ணி கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A girl shot by her father and brother in UP for fall in love with a guy. The girl is in srious condition admitted ih hospital.
Please Wait while comments are loading...