என்னங்க இது.. 7 நாள்களுக்கு முன்னர் திருமணம்.. ஆனால் பொண்ணு 8 மாத கர்ப்பம்.. மாப்பிள்ளை ஷாக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 7 நாள்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஆனால் தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் மணமகன் அதிர்ச்சியாகி விட்டார்.

கர்நாடகா மாநிலம், நாகமங்கலா அருகே உள்ள பீமனஹள்ளியைச் சேர்ந்தவர் 19 வயதான அனிதா (பெயர் மாற்றம). தோடா கருடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்.

இருவருக்கும் கடந்த 8-ஆம் தேதி திருமணம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மறுவீடு சம்பிரதாயம் எல்லாம் முடிந்து அனிதா மணமகன் வெங்கடேஷ் வீட்டுக்குச் சென்றார்.

வயிறு வலி

வயிறு வலி

இந்நிலையில் அனிதாவுக்கு தினந்தோறும் வயிறு வலிப்பதாக கூறினார். மாப்பிள்ளை வீட்டாரும் கடும் வெயிலால் உடல் வெப்பம் அடைந்து வயிறு வலி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தனர்.

கடும் வலி

கடும் வலி

பல்வேறு பாட்டி வைத்தியங்களை அவருக்கு செய்தனர். எனினும் வலி ஒரு நாள் அதிகமாகியது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் பீதியடைந்தனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவர் பரிசோதனை

மருத்துவர் பரிசோதனை

அப்போது மருத்துவர்கள் அனிதாவை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாதம் கர்ப்பமாக உள்ளதாக தெரிந்தது. இதை மணமகன் வீட்டார் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அனிதாவிடம் விசாரணை

அனிதாவிடம் விசாரணை

பின்னர் அனிதாவும் அவரது குடும்பத்தினரும் தங்களை ஏமாற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் மணமகன் வீட்டார் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் அனிதாவிடம் விசாரணை நடத்தினர்.

காதலால் ஏற்பட்ட கர்ப்பம்

காதலால் ஏற்பட்ட கர்ப்பம்

அனிதா கூறுகையில், திருமணத்துக்கு முன்னர் சந்திரசேகர் என்பவரை காதலித்தேன். அப்போது அவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பம் அடைந்தேன். இதை அவரிடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

வீட்டில் பார்த்த மாப்பிள்ளை

வீட்டில் பார்த்த மாப்பிள்ளை

இந்நிலையில் எனக்கு வீட்டில் வெங்கடேஷுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்றார். இதைத் தொடர்ந்சது காதலன் சந்திரசேகர் மீது அனிதா புகார் அளித்துள்ளார்.

அது சரி, 8 மாத கர்ப்பம் என்றால் வயிறு மேடிட்டிருக்குமே..அதைக் கூடவா யாரும் பார்க்கலை!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A couple get married on June 8 in Karnataka. After some days, a newly married girl has complaining of stomach pain. On following this, she was taken to hospital and Doctor confirmed that girl is 8 months pregnant.
Please Wait while comments are loading...