For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

300 உறவுக்காரர்கள் சூழ.. தாய் ஆசியோடு.. சாட்சாத் விஷ்ணு பகவானை திருமணம் செய்த இளம் பெண்!

Google Oneindia Tamil News

ஜெய்பூர்: திருமணம் செய்தால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படும் என்று கருதி கடவுள் விஷ்ணுவையே பட்டதாரி இளம்பெண் ஒருவர் திருமணம் முடித்துள்ளார்.

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பெரியவர்கள் சொல்வதை கேள்வி பட்டு இருப்போம்.

அந்த அளவுக்கு திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய அத்தியாயமாக பார்க்கப் படுகிறது.

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்! இந்து ஆண் இரு பெண்களை திருமணம் செய்யலாமா? சட்டம் சொல்வது என்னஇரட்டை சகோதரிகளை திருமணம் செய்த இளைஞர்! இந்து ஆண் இரு பெண்களை திருமணம் செய்யலாமா? சட்டம் சொல்வது என்ன

கடவுளையே திருமணம் செய்த இளம்பெண்

கடவுளையே திருமணம் செய்த இளம்பெண்

ஊர்கூடி பெரியவர்கள் மனதார வாழ்த்தி திருமணங்கள் நடைபெறும். ராஜஸ்தானில் இதுபோலத்தான் ஒரு திருமணம் நடைபெற்றது. ஆனால், மணமகனாக கடவும் விஷ்ணுவையே மணப்பெண் தேர்வு செய்ததுதான்... பலருக்கும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இருந்தாலும் எனது முடிவு சரியே என விடாப்பிடியாய் இருந்த அந்த பட்டதாரி இளம்பெண் பூஜா தான் நினைத்தபடி கடவுளையே திருமணம் செய்து விட்டதாக கூறி அனைவரையும் ஷாக் ஆக வைத்தார். இது குறித்த விவரம் வருமாறு: -

பட்டதாரி இளம்பெண்

பட்டதாரி இளம்பெண்

ராஜஸ்தானின் ஜெய்பூர் அருகே உள்ள நரசிங்கபுரா பகுதியை சேர்ந்தவர் பூஜா. பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற பூஜா சிங்கிற்கு 30 வயது ஆகிறது. திருமண வாழ்க்கையில் இவருக்கு உடன்பாடு இல்லையாம். திருமணத்தால் வாழ்க்கை பாழாகிவிடுவதாகவும் அற்ப விஷயங்களுக்காக கூட கணவன் - மனைவி இடையே சண்டை நடப்பதாகவும் கூறி வந்த பூஜா சிங், பெண்கள்தான் மண வாழ்க்கையில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் எனவே நான் கடவுளை திருமணம் செய்ய முடிவு செய்து விட்டேன் என்று தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.

 மகளின் ஆசையை நிறைவேற்றிய தாய்

மகளின் ஆசையை நிறைவேற்றிய தாய்

மகளின் முடிவைக் கேட்டு பூஜாசிங்கின் தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். எல்லை பாதுகாப்பு படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பூஜா சிங்கின் தந்தை, பூஜாசிங்கின் முடிவுக்கு உடன்படவில்லை. ஆனாலும் மகளின் ஆசையை நிறைவேற்ற தாயார் ரதன் கன்வார் ஆதரவாக இருந்துள்ளார். மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்து பாரம்பரிய படி திருமணத்தையும் பிரம்மாண்டமாக நடத்த பூஜாசிங்கின் தாயர் ஏற்பாடு செய்துள்ளார். சுமார் 300 க்கும் மேற்பட்ட உறவினர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்களாம்.

வீட்டிலேயே கோயில் அமைத்து வழிபாடு

வீட்டிலேயே கோயில் அமைத்து வழிபாடு

இந்து முறைப்படி அனைத்து சடங்குகளும் நடைபெற்றுள்ளது. இதன்பிறகு நான் கடவுள் விஷ்ணுவை மணந்து கொண்டதாக பூஜா சிங் கூறினார். பூஜா துளசிச் செடிக்கு சடங்குகள் செய்து திருமண சடங்குகளை செய்தார். பண்டிதர் ஒருவர் கடவுளை திருமணம் செய்வது சாத்தியம் என்று கூறியதால் அவர் கூறிய சடங்குகளை செய்து மணம் முடித்துக்கொண்டதாக பூஜா கூறினார். தற்போது தனது வீட்டிலேயே ஒரு கோவில் அமைத்து தாகூர்ஜியை (கடவுள் விஷ்ணு) பூஜைகள் செய்து வழிபட்டு வருவதாக பூஜா கூறி வருகிறார்.

பெருமாளை பக்தை கரம் பிடிப்பது புதிது கிடையாது. ஸ்ரீரங்கம் பெருமானை ஆண்டாள் கரம்பற்றியது வரலாறு. ஆண்டாளின் பாசுரங்களை பக்தர்கள் பாடும் மார்கழி நன்னாளில், ராஜஸ்தானிலும் ஒரு இளம் பெண் பெருமாளை கரம்பிடித்துள்ளது நெகிழ்ச்சியாக பேசப்படுகிறது.

English summary
A young graduate married Lord Vishnu, believing that there will be frequent fights between husband and wife if they get married in Rajasthan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X