சைக்கிள் வாங்கித் தருவதாக சிறுவனைக் கடத்தி கொலை.. வாய் தகராறால் டெல்லியில் நடந்த கொடூரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஆஷிஷ் என்ற 7 வயது சிறுவன் ஒருவன் கடத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறான். அவனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அவ்தேஷ் சாக்கியா என்ற நபர் இவனைக் கடத்தி சென்று கொலை செய்து இருக்கிறார்.

இவர் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காகத் தீவிரமாக படித்து வந்த நபர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஷிஷின் அப்பாவிற்கும் இவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது.

ஏன் கொலை செய்தேன், எப்படி அதை மறைத்தேன் என்று அவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறான். தற்போது அந்தச் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

 பிரச்சனை

பிரச்சனை

அவ்தேஷ் சாக்கியா ஆஷிஷின் அப்பாவிற்குச் சொந்தமான வீட்டில்தான் வாடகைக்கு வசித்து வருகிறார். இருவருக்கும் இடையில் இரண்டு மாதம் முன் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. ஆஷிஷின் அப்பா, இவரை மோசமான வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இதனால் அவருக்குப் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போய் உள்ளது.

 கடத்தினார்

கடத்தினார்

இந்த நிலையில் கோபம் அடைந்த அவ்தேஷ், ஆஷிஷை கடத்தி இருக்கிறான். அவன் பள்ளியில் இருந்து திரும்பி வரும் போது புதிய சைக்கிள் வாங்கித் தருகிறேன் என்று கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மயக்க மருந்து கொடுத்து அடைத்து வைத்துள்ளார்.

 கொலை செய்தார்

கொலை செய்தார்

பின் பணம் கேட்கலாம் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால் போலீசிடம் அந்தச் சிறுவன் உண்மையைச் சொல்லிவிடுவான் என்று பயந்து அங்கேயே கொலை செய்துள்ளார். அதோடு கடந்த 35 நாட்களாக அடைத்து வைத்துள்ளார். போலீசும் சிறுவன் கிடைக்காமல் திணறி இருக்கிறார்கள்.

 பிடித்தார்கள்

பிடித்தார்கள்

இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து நாற்றம் அடிக்கவே போலீசாருக்கு பக்கத்து வீட்டில் இருந்த இன்னொரு குடும்பம் தகவல் கொடுத்துள்ளது. உடனே போலீசார் அங்குச் சோதனையிட்டு சிறுவனின் உடலை மீட்டனர். போலீஸ் தற்போது அவ்தேஷ் சாக்கியா மீது பல்வேறு வழக்குகள் பதிந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Man named Avdesh Sakya, 27 had kidnapped and killed 7-year-old boy Ashish to seek revenge on his house owner. They had fight each other few months ago.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற