பெங்களூரில் சாலையோரத்தில் துடித்த 1000 கிலோ மீன்கள்... அள்ளிச் சென்ற பொதுமக்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  குளம் நிரம்பியதால் ரோட்டில் குவியும் மீன்கள்-வீடியோ

  பெங்களூர்: பெங்களூரில் உள்ள பொம்மகட்டா ஏரி நிரம்பி அதிலிருந்த மீன்கள் சாலைக்கு வந்ததாகவும் அவற்றை பொதுமக்கள் அள்ளிச் சென்றதாகவும் சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது.

  பெங்களூரில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் டன் கணக்கில் உயிருடன் துடிக்கும் மீன்களை பொதுமக்கள் அள்ளிச் செல்லும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைைதளங்களில் பரவியது.

  A video goes viral that people takes the fish which were in the sides of NH

  வரலாறு காணாத அளவுக்கு பெங்களூரில் மழை பெய்து வருவதால் அங்குள்ள பொம்மகட்டா ஏரி நிரம்பி அதிலிருந்த மீன்கள் சாலையோரத்தில் வந்ததாக தகவல் பரவியது. ஆனால் உண்மையில் அவ்வழியாக மீன்களை ஏற்றிச் சென்ற லாரி விபத்தில் சிக்கியது.

  இதிலிருந்து மீன்கள் சாலையில் கொட்டின. இதைத்தான் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அள்ளிச் சென்றது தெரியவந்தது. எனவே ஏரி நிரம்பி மீன்கள் வெளியே வந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் பொய்யானவை என தெரியவந்தது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A video goes viral that fish carrying lorry got accident in Bangalore NH. As fish came out in road. People takes the fish.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற