Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலித்துகளை டீமில் இருந்து விரட்டுங்க-ஒலிம்பிக் வீராங்கனை வந்தனா வீடு முன்பு ஜாதிவெறி கோஷம்!

Subscribe to Oneindia Tamil

ஹரித்வார்: ஒலிம்பிக் அரை இறுதியில் தோல்வி அடைந்ததால் மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன்பாக ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி கோஷம் எழுப்பிய ஆதிக்க ஜாதி கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ராணி ராம்பால் தலைமையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றது. முதல் 3 ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் வெற்றியை நழுவவிட்டனர். இதனால் காலிறுதியை கூட இந்திய மகளிர் அணியால் தாண்ட முடியாது என்கிற எகத்தாளங்கள் எழுந்தன.

பின்னர் நடைபெற்ற 2 போட்டிகள் அடுத்தடுத்து வெற்றி வாகை சூடி எள்ளல்களுக்கு பதிலடி கொடுத்தனர் நமது வீராங்கனைகள். கால் இறுதிக்குள் கால் பதித்த இந்திய வீராங்கனைகள், வலிமையான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் கண்டது. ஆஸ்திரேலியாவுடன் மல்லுக்கட்டி வீழ்த்தி வரலாற்று சாதனையும் படைத்தனர் இந்திய மகளிர் அணி.

வெற்றியை இழந்தனர்

வெற்றியை இழந்தனர்

வரலாற்றில் முதல் முறையாக இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று சரித்திரம் படைத்தனர். உலக அளவில் 3-வது இடத்தில் இருக்கும் ஜாம்பவான் அணியான அர்ஜெண்டினாவை நமது வீராங்கனைகள் எதிர்கொண்டனர். இதனால் ஒட்டுமொத்த தேசமும் இந்த போட்டியை பேராவலுடன் எதிர்பார்த்தனர். இருப்பினும் 1-2 என்ற கோல் கணக்கில் நமது அணி வெற்றியை இழந்தது.

பிரதமர் மோடி ஆறுதல்

பிரதமர் மோடி ஆறுதல்

இருந்தபோதும் தேசம் முழுவதும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கான பாராட்டுகள் குவிந்தன. இனிவரும் இளம்பெண்களுக்கு முன்னுதாரண வீராங்கனைகளாக ராணி ராம்பால்களும் வந்தனா கட்டாரியாக்களும் திகழ்வார் என்ற புதிய சரித்திரப் பக்கத்தை டோக்கியோவில் நிகழ்த்தி இருந்தனர். நமது பிரதமர் மோடியும், மனம் தளராமல் இருங்கள். ராணி ராம்பாலும் ஜோர்ட் மர்ஜினேவும் தலைசிறந்த ஒரு அணியை வழிநடத்தி இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பு மிகக் கடுமையானது. எதற்கும் கவலைப்படாமல் அடுத்த கட்ட பயணத்தைத் தொடருங்கள். வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் இடம்பெறக் கூடிய அங்கம்தான் என ஆறுதலையும் நம்பிக்கையையும் தந்து கொண்டிருந்தார்.

ஹரித்வாரில் அட்டூழியம்

ஹரித்வாரில் அட்டூழியம்

அதேநேரத்தில் இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஜாதிய வன்மத்தையும் ஒரு கும்பல் அநாகரிகமாக இந்திய மண்ணில் வெளிப்படுத்தி ஆட்டம் போட்டிருக்கிறது என செய்தி வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார்.... இந்துக்களின் புனித நகரம். ஹரித்வாரில் ஓடும் கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் ஐதீகம். இங்கேதான் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளாவில் பல்லாயிரக்கணக்கான இந்து சாதுக்களும் பல கோடி இந்துக்களும் புனித நீராடி தங்களை புனிதப்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் புனித மண்ணில்தான் அப்படியான ஒரு ஜாதிய பேரவலத்தை ஒரு கும்பல் நிகழ்த்தி வெறியாட்டமாடி இருக்கிறது என்பது எவ்வளவு வேதனையானது.

ஜாதிய ரீதியா இழிவு படுத்தி முழக்கம்

ஜாதிய ரீதியா இழிவு படுத்தி முழக்கம்

டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி சொல்வது என்ன? ஒட்டுமொத்த நாடே இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் குறித்து பெருமிதப்பட்டுக் கொண்டிருந்த அந்த தருணம். ஹரித்வார் மாவட்டம் ரோஷ்னாபாத்தில் உள்ள மகளிர் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா வீடு முன்பு ஒரு கும்பல் திடீரென கூடியது. ஆட்டம் பாட்டத்துடன் பட்டாசுகளை வெடித்து வெறிக்கூச்சல் போட்டது. அப்போதுவரை என்ன ஏது என்று வந்தனா கட்டாரியாவின் குடும்பத்துக்கும் புரியவில்லை. ஏனெனில் ஒலிம்பிக்கில் தோற்றுவிட்ட நிலையில் பட்டாசுகளை வெடிக்கிறார்களே என்கிற குழப்பம்தான் அது. அப்போது அந்த கும்பல் எழுப்பிய முழக்கங்கள்தான் நம் அனைவரையும் பதற வைக்கின்றன. அவர்கள் ஜாதிய வன்மத்துடன் முழக்கங்களை எழுப்பினார். இந்திய ஹாக்கி அணியில் தலித் வீராங்கனைகளை நிறைய சேர்த்ததால் தேசம் தோற்றுவிட்டது என காட்டுக் கூச்சல் போட்டார்கள். இந்திய ஹாக்கி அணியில் இருந்து தலித் வீராங்கனைகளை விரட்டுங்கள் என அநாகரிகமான மொழியில் குரல் எழுப்பினார்கள். இதனால் குலைநடுங்கிப் போனது வந்தனா கட்டாரியாவின் குடும்பம் மட்டுமல்ல.. தேசத்தின் ஆன்மாவும் சமுத்துவத்தன்மையும்தான்.

இது தேசதுரோகம் அல்லவா?

இது தேசதுரோகம் அல்லவா?

இச்சம்பவம் தொடர்பாக வந்தனா கட்டாரியாவின் சகோதரர் சந்திரசேகர் கூறுகையில், எங்கள் வீட்டு முன்பாக 3 அல்லது 4 இளைஞர்கள் ஒன்று கூடி பட்டாசு வெடித்து குதூகலமிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், உங்க ஜாதிக்காரங்க எப்படி இந்திய அணியில் சேர்ந்து விளையாடலாம் என கேள்வி கேட்டார். அத்துடன் நிற்கவில்லை. எங்களை கொலை செய்துவிடுவோம் எனவும் அந்த கும்பல் மிரட்டியது. இதனால் அச்சத்தில் உறைந்து போனோம். எங்கள் வீட்டில் இருந்து சிறிது தொலைவில்தான் அந்த இளைஞர்கள் வீடும் உள்ளது. இதையடுத்து போலீசில் நாங்கள் புகார் கொடுத்தோம் என்கிறார் பதற்றத்துடன். மேலும் அப்படி ஜாதிய குரல் எழுப்பியவர்களில் 2 பேர் ஹாக்கி வீரர்கள். எங்கள் வந்தனா இந்திய அணியில் இடம்பிடித்ததால் எங்களுடன் விரோதமாகவே இருந்தனர். நாட்டுக்காகத்தானே வந்தனா விளையாடினார். தோற்றது இந்திய ஹாக்கி அணிதானே.. அதை இப்படி கொண்டாடுவதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் மீது தேசதுரோக வழக்குப் போட்டு தண்டித்தாக வேண்டும் என்றார் சற்றே ஆவேசமாக.

4 பேர் மீது வழக்கு- ஒருவர் கைது

4 பேர் மீது வழக்கு- ஒருவர் கைது

இதனையடுத்து ஹரித்வார் போலீசார் விசாரணை நடத்தி விஜய்பால், அன்குர் பால், சுமித் சவுகான் மற்றும் அடையாளம் தெரியாத நபர் என 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த 4 பேர் மீதும் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்களில் விஜய்பால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு ஜாதிய வன்மம் என்பது தேசத்துக்கே எதிரானதாக உருவெடுத்திருக்கிறது என்பதை இவர்கள் உணருவார்களா? ஜாதிய வெறித்தனம் கண்களை மூடி தேசதுரோகப் பாதைக்கு கொண்டு செல்லும் அபாயகரமானது என்பதை இளைஞர்கள் உணரவேண்டிய தருணம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+