ரயில் கட்டண சலுகைக்கு ஆதார் எண் கட்டாயம்.. வருகிறது புது விதிமுறை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசின் பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட் சேர்த்து, வரும் பிப்ரவரி 1ம் தேதி, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ரயில் டிக்கெட்டில் சலுகை பெற, ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்குவது தொடர்பான அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் பயணிகளில் மூத்த குடிமக்கள் உட்பட, 50 பிரிவினருக்கு, டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், ஆதார் கட்டாயம் ஆக்கப்படுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications