For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மிக்கு 14 இடங்கள்தான் கிடைக்குமாம்- உளவுத்துறை தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு 14 இடங்கள்தான் கிடைக்கும் என்று உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் உளவுத் துறையின் அறிக்கைகளோ ஆம் ஆத்மி கட்சியால் அதிகபட்சம் 14 முதல் 16 தொகுதிகளைத் தான் கைப்பற்ற முடியும் என்று கூறப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

AAP will get 14 seats says this IB report on Delhi polls

டெல்லி தேர்தல் தொடர்பான உளவுத்துறை அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:

  • டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி 49 நாட்களிலேயே ராஜினாமா செய்ததால் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
  • ஒரு அரசு என்றால் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டுமே தவிர ராஜினாமா செய்வது தீர்வாக இருக்காது என்பதுதான் பலரது கருத்தாக இருக்கிறது.
  • டெல்லியிலும் மத்தியிலும் ஒரே கட்சியின் ஆட்சி இருந்தால் மாநில வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதும் பலரது எண்ணமாக இருக்கிறது.
  • 49 நாள் ஆட்சி ராஜினாமா மற்றும் லோக்சபா தேர்தல் முடிவுகளால் ஆம் ஆத்மி கட்சிக்கு இருந்த ஆதரவு சரிந்து போயுள்ளது.
  • கிரண்பேடியை டெல்லி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது பாரதிய \ஜனதா கட்சிவுக்கு நல்ல ஆதரவைத் தந்துள்ளது.
  • டெல்லிவாசிகளைப் பொறுத்தவரையில் கிரண்பேடி சிறந்த முதல்வராக இருப்பார் என்று எதிர்பார்க்கின்றனர்.
  • ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஏராளமான தலைவர் விலகியது அக்கட்சிக்கு பின்னடைவாக இருக்கிறது. அத்துடன் பலரும் ஆம் ஆத்மி கட்சியின் சர்வாதிகாரத்தை விமர்சிப்பதும் மக்களிடத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
The Delhi battle between the Bharatiya Janata Party and the Aam Admi Partry may not be a hard fought one after all if one goes by this intelligence bureau report. Two reports by the Intelligence Bureau which has done a comprehensive study of the forthcoming elections suggest that the AAP may not get more than 14 to 16 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X