For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆருஷிவழக்கு: ராஜேஷ்- நுபுர் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: 14 வயது சிறுமி ஆருஷி கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அவருடைய பெற்றோரான ராஜேஷ், நுபுர் தல்வார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவை சேர்ந்தவர் மருத்துவர் ராஜேஷ் தல்வார். அவருடைய மனைவி நுபுர் தல்வார். இருவரும் பல் மருத்துவர்கள். இவர்களது ஒரே மகள் 14 வயது ஆருஷி. 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 15-ந்தேதி இரவில், சிறுமி ஆருஷி தொண்டை அறுக்கப்பட்டு மர்மமான முறையில் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில், வீட்டு வேலைக்காரரான ஹேம்ராஜ் மீது முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால், மறுநாள் வீட்டின் மேல் மாடியில் ரத்தவெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தது அதிர்ச்சி அளித்தது.

Aarushi-Hemraj

அதைத் தொடர்ந்து தீவிர விசாரணைக்கு பின்னர் குடும்ப கவுரவத்தை காப்பதற்காக இந்த இரட்டை கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் முடிவுக்கு வந்து, ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட பின் ராஜேஷ் தல்வார் ஜாமீனில் வெளியே வந்தார்.

பல்வேறு மேல் முறையீடுகளை சந்திந்த இந்த வழக்கில், சி.பி.ஐ. அறிக்கையின் அடிப்படையில் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி அன்று ஆருஷியின் பெற்றோரான மருத்துவர் தம்பதியினர் மீது குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்தது.

குற்றவாளிகள் என தீர்ப்பு

அதன்பின் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கு பிறகு, தனி நீதிபதி நீதிபதி ஷியாம்லால், ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ்-நுபுர் தல்வார் தம்பதியினரே ஆருஷியை கொலை செய்த குற்றவாளிகள் என்ற தீர்ப்பை நேற்று வழங்கினார்.

இந்த மாத இறுதியில் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி ஷியாம்லால், நேற்று இரு முறை வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தபின், மாலை 3.25 மணிக்கு இத் தீர்ப்பை வழங்கினார்.

Rajesh, Nupur

ஆயுள் தண்டனை

இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை விவரம் குறித்து இன்று நடைபெறும் வழக்கறிஞர்கள் வாதத்துக்குப்பின் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி ஷியாம்லால் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் இருதரப்பு வாதம் தொடங்கியது. ராஜேஷ், நுபுர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்கள், இருவருக்கும் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, அரிதினும் அரிதான இந்த வழக்கில் இருவருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் மற்று தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காசியாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

English summary
The sentencing in the Aarushi-Hemraj murder case is likely to be delivered on Tuesday. This came after the CBI court on Monday convicted Aarushi's parents Rajesh and Nupur Talwar of the double murders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X