குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக மாறிய தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் காங்கிரசின் தேர்தல் பிரசாரத்திற்கு தனுஷ் நடித்த வொய் திஸ் கொலவெறி பாடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான '3' என்ற திரைப்படத்தில் இடம் பிடித்த வொய் திஸ் கொலவெறி, கொலவெறி டி, பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ் பெற்றது. தமிழ் தெரியாத மாநிலங்களிலும் பாடல் புகழ் பெறக் காரணம், அதன் பெப்பியான மியூசிக் மற்றும், பெரும்பாலான வார்த்தைகள் ஆங்கில வழக்கு மொழியில் அமைந்திருந்தது ஆகும்.

இந்த பாடலை கால ஓட்டத்தில் தமிழ் ரசிகர்கள் முனுமுனுக்க மறந்திருக்கலாம், குஜராத் காங்கிரசாருக்கு இப்போது இதுதான் தாரக மந்திரம்.

குஜராத் சட்டசபை தேர்தல்

குஜராத் சட்டசபை தேர்தல்

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆளும் பாஜக கடும் முயற்சிகளை தொடங்கிவிட்டது. பிரதமர் மோடி குஜராத் மாநில முன்னாள் முதல்வர் என்பதால், அவருக்கு இது இமேஜ் பிரச்சினையாக உருமாறியுள்ளது. குஜராத் தேர்தலில் ஒருவேளை பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால் அது 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக கருதப்படும் என்பதாலும், மோடிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துவிடும் என்பதாலும் குஜராத் தேர்தலில் வெற்றிபெற பாஜக அனைத்து வகை முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

குஜராத் பிரசார வாசகம்

குஜராத் பிரசார வாசகம்

குஜராத்தில் தொடர்ச்சியாக பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், குஜராத் மாநிலம் வளர்ச்சியடைந்துவிட்டதாக கூறி பிரசாரம் செய்யும் முயற்சிகளில் பாஜக இறங்கியுள்ளது. வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற பிரசாரம் முன்வைக்கப்பட்டதை போல இப்போது, குஜராத்தில் எடுத்துள்ள வாசகம்தான், 'விகாஸ் கான்டோ தயோ ச்சே'

 பாஜக ஆட்சியில் வளர்ச்சி

பாஜக ஆட்சியில் வளர்ச்சி

'விகாஸ் கான்டோ தயோ ச்சே' என்றால், அதி பயங்கரமாக வளர்ச்சி இருக்கிறது என்பது பொருள். இந்த வாசகத்திற்கும், கொலவெறி பாடலுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவது என்பது ஏதோ சினிமா டயலாக் இல்லை. குஜராத் காங்கிரசும் அதைத்தான் செய்துள்ளது. சம்மந்தம் இல்லைன்னா என்ன சம்மந்தப்படுத்திக்கொள்வோம்ல என்று சொல்கிறார்கள் குஜராத் காங்கிரசார்.

தனுஷ் பாடல்

வொய் திஸ் கொலவெறி பாடல் வரிகளை டப் செய்து 'விகாஸ் கான்டோ தயோ ச்சே' என்று ஆரம்பிக்கும் வகையில் பாடல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஆடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதில் ரோடு இல்லை, பிசினஸ் இல்லை, வரிக்கு மேல் வரி, வேலை வாய்ப்பு இல்லை என்பது போன்ற பாடல் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது குஜராத் சோஷியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Vikas gando thayo chhe is the Gujrat assembly poll campaign and for which actor Danush's song being used.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற