For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டாசு வெடிக்கும் பணத்தில் சோறு போடலாம்! அல்லாவும் ஏழுமலையானும் ஒன்னுதான்! தடலாடியாகப் பேசிய விஷால்

Google Oneindia Tamil News

அமராவதி : 100 ரூபாயை செலவு செய்து மக்களுக்கு சேவை செய்தால் போதும் அவர்கள் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாகவே அர்த்தம் அப்படி பார்க்கும்போது தான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக நடிகர் விஷால் ஆந்திராவில் பேசியிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பின்னர் தேர்தலில் போட்டியிட போய் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டவர் நடிகர் விஷால்.

நடிகர் சங்கத்தின் செயலாளர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என பல பதவிகளை வகித்த அவர் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட முயற்சித்தார். ஆனால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போனது.

அரசியலுக்கு விஜய் “க்ரீன்” சிக்னலா? முதல்வர் “தளபதி” வாழ்க - ரசிகர்கள் கோஷம்.. துணை முதல்வர் “இவரா?” அரசியலுக்கு விஜய் “க்ரீன்” சிக்னலா? முதல்வர் “தளபதி” வாழ்க - ரசிகர்கள் கோஷம்.. துணை முதல்வர் “இவரா?”

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

நடிகர் சங்க தேர்தலையே தமிழக சட்டமன்ற தேர்தல் அளவுக்கு பிரம்மாண்டம் காட்டி ஊடகங்கள் முழுவதும் பேசும் பொருளாக மாறியது. அவரது அணியில் நாசர் கார்த்தி உள்ளிட்ட பிரபல நடிகர்கள் சேர்ந்த நிலையில் அதில் வெற்றியும் பெற்றார். இதை அடுத்து திரையுலகில் ஒரு பெரிய அளவில் ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து தொடர் தோல்வி படங்களை கொடுத்தார்.

அரசியல் பிரவேசம்

அரசியல் பிரவேசம்

தற்போதை சூழலில் முன்னணி நடிகர் பட்டியலில் விஷால் இல்லை. இந்த நிலையில் அவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு தருவதாகவும், ஆம் ஆத்மி கட்சியில் சேர போவதாகவும் பல்வேறு தகவல்கள் உலாவி வருகின்றன. இது தொடர்பான யூகங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தான் ஏற்கனவே அரசியலில் வந்து விட்டதாக விஷால் கூறியிருக்கிறார்.

தர்காவில் வழிபாடு

தர்காவில் வழிபாடு

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் பீர் தர்காவில் வழிபாடு நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்," இங்கு வரும்போது எல்லாம் எனக்கு பெரிய அளவில் ஒரு எனர்ஜி கிடைக்கும். அதனால் இங்கு வந்துள்ளேன். நான் அல்லாஹ்வையும் வெங்கடேஸ்வர சுவாமியையும் இயேசுவையும் வழிபடுகிறவன். எனக்கு மதம் என்ற பிரிவினை கிடையாது. அனைத்து மத கடவுள்களையுமே நான் மதிக்கக் கூடியவன் தான்.

அரசியலுக்கு வந்துட்டேன்

அரசியலுக்கு வந்துட்டேன்

.தீபாவளி பண்டிகைக்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பட்டாசு வெடிக்காமல் ஏழைகளுக்கு உதவியும் செய்யலாம். ஐந்து நிமிடம் பட்டாசு வெடிக்கும் பணத்தில் ஏழைகளின் வயிறு நிறைய உணவு அளித்தால் மிகவும் நல்லது என்பது எனது கருத்து. ஒருவர் 100 ரூபாய் செலவு செய்து விட்டாலே அவர் சேவை செய்தால் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அந்த வகையில் நான் எப்போதும் அரசியலுக்கு வந்து விட்டேன்" என கூறி இருக்கிறார்.

English summary
Actor Vishal has spoken in Andhra Pradesh that if he spends 100 rupees and serves the people, it means that they have entered politics at some point.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X