For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகநூலே மூச்சு! இணைய அடிமைகளாகின்றனரா இந்தியர்கள்?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வீட்டில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் முகம் பார்த்து புன்னகைக்கின்றனரோ இல்லையோ முகநூலில் நண்பர்களுக்கு காலை வணக்கம் சொல்லத் தவறுவதில்லை.

குடும்ப உறவுகளோடு இணைந்திருக்கின்றனரோ இல்லையோ இணையத்தோடுதான் சர்வ சதாகாலமும் இணைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஒரு ஆய்வின் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு ஒன்றினை கெர்னி குளோபல் ரிஸர்ச் அமைப்பு நடத்தியது. 10 நாடுகளில், 10,000 பேரை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 53 சதவீத இந்தியர்கள் தாங்கள் கண்விழித்திருக்கும் நேரமெல்லாம் இணையத்தை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. இணையத்தை பயன்படுத்துபவர்களில் சர்வதேச சராசரியே 51 சதவிகிதம்தான்.

Addicted? Indians use internet every waking hour

இந்தியாவில் தொடர்ந்து இணையத்தில் இயங்குவது வழக்கமாகிவிட்டது. இந்தியர்கள் இணையத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு, மூன்று முக்கியக் 'கூறுகள்' இருப்பதாக இந்த ஆய்வு குறிப்பிடுக்கிறது.

மற்றவர்களோடு நட்பு ஏற்படுத்திக் கொள்ளவும், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் இந்தியர்கள் முகநூலையும், சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகின்றனர்.

மூன்றாவதாக, ஷாப்பிங் செய்வதற்காக இணையம் பயன்படுத்தப்படுகிறது. இந்த காரணத்தை, ஆய்வில் கலந்து கொண்ட 92 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்.

ஆய்வில், 97 சதவீத இந்தியர்கள் தங்களுக்கு ஃபேஸ்புக் கணக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர். அதில் 77 சதவீத இந்தியர்கள், தினமும் ஃபேஸ்புக் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர்.

இவ்வாறு இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் சராசரி சீனாவில் 36 சதவீதமும், ஜப்பானில் 39 சதவீதமும், சர்வதேச அளவில் 51 சதவீதமும் உள்ளது.

கருத்துக்களை சுதந்திரமாக பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள அதிக கட்டுப்பாடு இருக்கும் நாடுகளில், இணையத்தைப் பயன்படுத்த இது முக்கியக் காரணமாகும்.

சீனாவில் 89 சதவித மக்கள், கருத்துக்களை வெளிப்படுத்தவே இணையத்தை உபயோகப்படுத்துவதாக கூறியுள்ளனர். இதே காரணத்தைக் கூறுபவர்களின் சர்வதேச சராசரி 62 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fifty-three percent of Indians are connected to the internet every waking hour which is higher than the global average of 51%, a new international study has found
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X