For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ஆப்' ஸ்டைலில் மொபைல் அப்ளிகேஷன் மூலம் வாக்காளர்களை கவரும் பாஜக, காங்கிரஸ்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரை கவரை ஆம் ஆத்மி கட்சியை அடுத்து பாஜகவும், புதிய ஸ்பார்ட்போன் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினரை கவர அரசியல் கட்சிகள் போட்டி போடுகின்றன. அதிலும் 18 வயது முதல் 23 வயது வரை உள்ள 150 மில்லியன் வாக்காளர்களை மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் கவரவே அரசியல் கட்சிகள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மொபைல் அப்ளிகேஷன் மூலம் டெல்லி வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வெற்றியும் கண்டது. இதையடுத்து பாஜக கடந்த 1ம் தேதி இந்தியா272+ என்ற மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

இந்தியாவில் 51 மில்லியன் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 89 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் அதீத வளர்ச்சியை கண்டு தான் அரசியல் கட்சிகள் மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளன.

பாஜக

பாஜக

பாஜகவின் மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே ஆன்ட்ராய்ட் பிளாட்பாரத்தில் 10,000 முறைக்கும் மேலாக டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜகவை தொடர்ந்து காங்கிரஸும் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த உள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் இரண்டு புதிய மொபைல் அப்ளிகேஷன்களை அறிமுகப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மியின் மொபைல் அப்ளிகேஷன் இதுவரை 10,000 முறை டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கட்தி ஐபோன் அப்ளிகேஷனை அடுத்த இரண்டு வாரத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய அப்ளிகேஷனில் ஆம் ஆத்மி கட்சி பற்றிய தகவல்கள் பல்வேறு இந்திய மொழிகளில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
After Aam Admi party, BJP has launched a mobile application to woo urban middle class voters. Following these two parties, congress is planning to launch two applications in a couple of weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X