For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெருங்கும் காவிரி வழக்கின் தீர்ப்பு நாள்: தமிழகம், கர்நாடகாவில் பதட்டம்

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி நீர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் தேதி நெருங்க நெருங்க தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இந்த மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Ahead of big Cauvery verdict, tense atmosphere in Karnataka, TN

கர்நாடகாவில் தேர்தல் நெருங்குவதால் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கர்நாடகாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் காங்கிரஸுக்கு பிரச்சனையாகிவிடும். ஏனென்றால் காவிரி டெல்டா பகுதி மக்களின் வாக்குகளை தான் காங்கிரஸ் பெரிதும் நம்பியுள்ளது.

அண்மையில் காவிரி தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தார். ஆனால் சித்தராமையா பழனிசாமியை இதுவரை சந்திக்கவில்லை. வரும் 16ம் தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் அந்த வேலையில் தீவிரமாக இருப்பதாக சித்தராமையா தெரிவித்துவிட்டார்.

தமிழகத்திற்கு நீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகா இல்லை என்று கர்நாடக மாநில நீர் வளத் துறை அமைச்சர் பாட்டில் தெரிவித்துள்ளார்.

English summary
With the Cauvery Waters verdict round the corner, the atmosphere is tense in both Karnataka and Tamil Nadu. The verdict is expected to be delivered before the end of this month by the Supreme Court of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X