For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரேடியோ கேட்கும் பழக்கத்தை அதிகரிக்க, ஆல் இந்தியா ரேடியோவின் இந்த அசத்தல் அதிகாரி செய்தது இதுதான்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பாட்னா: டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பிரசார் பாரதி 260க்கும் மேற்பட்ட அனைத்திந்திய வானொலி நிலையங்கள் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களை ட்விட்டர் வாயிலாக இணைத்துள்ளன. பீகாரின் சிறு மாவட்டமான தர்பாங்காவிலுள்ள ஆல் இந்தியா ரேடியோ நிலையம், அதிகப்படியான சோஷியல் மீடியா தளங்களை கொண்டுள்ளது ஆச்சரியமான தகவல்.

தர்பங்காவிலுள்ள ஆல் இந்தியா ரேடியோ திட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ரந்தீர் தாக்கூர் (34), இந்த பணியின் பின்னணியில் இருப்பவர் ஆகும். இந்தியாவின் மிக மூத்த ரேடியோ நிலையமான ஆல் இந்தியா ரேடியோவை, இன்றைய இளைஞர்களிடம் இணைக்க இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

AIR Darbhangas social media push takes radio programmes beyond Bihar

தாக்கூர் இந்திய கடற்படையில் 15 வருட காலம் பணியாற்றியவர். தனது ஸ்மார்ட் போன் மூலமாக மட்டுமே இவ்வளவு பெரிய பணியை அவர் செய்து முடித்துள்ளார். பல்வேறு கிரியேட்டிவ் ஐடியா மூலமாக, ஸ்மார்ட் போன் காலத்து இளைஞர்களை அவர் ஈர்த்துள்ளார்.

இவரது திறமையான செயல்பாட்டால், பீகாரை தாண்டியும், வானொலி குறித்த தகவல் வெளியே போயுள்ளது. இதுபற்றி, ரந்தீர் தாக்கூரிடம் 'ஒன்இந்தியா' சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

AIR Darbhangas social media push takes radio programmes beyond Bihar

ரேடியோ தொடர்பான ஆர்வம் குறைந்தபடி உள்ளது. ஆனாலும் ரேடியோ தொழில்நுட்பம் முற்றிலும் ஒடுங்கிப்போகவில்லை. கிராமப்புறங்களில் இப்போதும் ரேடியோ நிகழ்ச்சிகளை மக்கள் கேட்க விரும்புகிறார்கள். பிரதமர் மன் கி பாத் என மாதந்தோறும் ரேடியோவில் உரையாற்றுவது, ரேடியோ கேட்பை அதிகரித்துள்ளது. எனவே நகர்ப்புற நேயர்களும் ரேடியோ கேட்க ஆரம்பித்துள்ளனர்.

சவுண்ட் கிளவுட், யூடியூப் சேனல் மூலமாகவும் எங்கள் ரேடியோ ஸ்டேஷனை பிரபலப்படுத்தி வருகிறோம். சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் செல்போன் பயன்பாட்டாளர்கள் அதிகம். எனவே செல்போன் மூலமாக ரேடியோவை பிரபலப்படுத்தும் திட்டத்தை கையில் எடுத்தோம்.

AIR Darbhangas social media push takes radio programmes beyond Bihar

தர்பங்கா ரேடியோ நிலையத்திற்கு தனியாக டிஜிட்டல் டீம் கிடையாது. எனவே நான் எனது செல்போன் வழியாக ரேடியோ நிலையத்தை பிரபலப்படுத்த ஆரம்பித்தேன். 2 இளைஞர்களும் இதில் எனக்கு உதவியாக இருந்தனர். பிரசார் பாரதி தலைமை செயல் அதிகாரி மற்றும் எனது சீனியர் அதிகாரிகள் உதவியின்றி இது சாத்தியமில்லை.

இதுவரை எங்கள் நிகழ்ச்சி பற்றி சோஷியல் மீடியாவில் ஒரு புகாரும் வந்தது இல்லை. பேஸ்புக்கில் நீண்டகாலமாக உள்ளோம். 3 மாதங்களாக ட்விட்டரில் உள்ளோம். கடந்த 3 மாதங்களில் 2500க்கும் மேற்பட்ட லைக்குகளை எங்கள் பேஸ்புக் பக்கம் பெற்றுள்ளது. இதுவரை ஒரு லட்சம் ஃபாலோவர்களை கடந்துள்ளோம். 2900 முறை சவுண்ட் கிளவுட் தளத்தில் நாங்கள் நேயர்களால் கேட்கப்பட்டுள்ளோம்.

நாங்கள் இளைஞர்களுக்காக மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதில்லை. அனைத்து வயதினருக்குமான ரேடியோ இது. வடக்கு பீகாரின் 9 மாவட்டங்களுக்கு எங்கள் ரேடியோ அலைவரிசை கிடைக்கிறது. ஆனால், டிஜிட்டல் மீடியா மூலமாக, இந்த வட்டாரத்தை தாண்டியும், எங்கள் ரேடியோவை மக்கள் கேட்டு ரசிக்கிறார்கள். மேற்கு வங்கம், மும்பையில் இருந்து கூட எங்களுக்கு ட்வீட் செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
In a major digital push, recently, Prasar Bharati got more than 260 of its all All India Radio Stations, Doordarshan Kendras and their regional news units on Twitter. Out of these, All India Radio station of Darbhanga, a small district in Bihar, is making the most of all social media platforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X