For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலைக்கு லேட்டாக வந்த 10 ஏர் ஹோஸ்டஸ்களை டிஸ்மிஸ் செய்த ஏர் இந்தியா

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: வேலைக்கு காலதாமதமாக வந்த 10 ஏர் ஹோஸ்டஸ்களை ஏர் இந்தியா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் பல கோடி நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலைக்கு தாமதமாக வந்த 10 ஏர் ஹோஸ்டஸ்களை(விமான பணிப்பெண்கள்) அந்நிறுவனம் கடந்த வாரம் பணிநீக்கம் செய்துள்ளது.

Air India sacks 10 air hostesses for reporting late for work

அவர்கள் தாமதாக வந்ததால் விமான சேவையும் தாமதமாகியுள்ளது. இது போன்று காலதாமதமாக வரும் மேலும் பலரும் இனிவரும் நாட்களில் வேலையை இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

கடந்த வாரம் ஏர் ஹோஸ்டஸ்கள் தாமதமாக வந்ததால் டெல்லியில் இருந்து சிகாகோவுக்கு செல்லும் நான் ஸ்டாப் விமானம் தாமதமாக கிளம்பியது. இதையடுத்து தாமதமாக வந்த 4 ஏர் ஹோஸ்டஸ்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து காலதாமதமாக வந்த மேலும் 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பலர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றார்.

English summary
Air India sacked about 10 air hostesses last week for reporting late for work, said a Times of India report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X