பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவு உடைந்து வீட்டின் மீது விழுந்தது... ஹைதராபாத்தில் ஷாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றின் கதவு உடைந்து கீழே இருந்த வீட்டின் மீது விழுந்து இருக்கிறது. விமானத்தின் கதவு விழுந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வீட்டின் தண்ணீர் தொட்டியும், கண்ணாடியும் மட்டும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விமானம் தெலுங்கானா ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் ஆகும்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு அருகில் 'லாலா பெட்; என்ற டியத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்து எதோ ஒரு பாகம் உடைந்து வேகமாக கீழே விழுந்து இருக்கிறது. கடைசியில் அந்த பாகம் லாலா பெட் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மொட்டை மாடியில் விழுந்து இருக்கிறது.

Aircraft's metal doors fell off and crashed onto terrace of a house's building

இந்த சம்பவத்தை அந்த வீட்டின் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் பார்த்து இருக்கிறார்கள். இதையடுத்து அந்த வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக அந்த பாகத்தை பார்த்துவிட்டு என்னவென்று தெரியாமல் போலீசாருக்கு தங்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

இதையடுத்து போலீசார் அந்த பாகங்களை அங்கு இருந்து எடுத்து சென்று விசாரணை நடத்தினர். அதன்படி அந்த சமயத்தில் அங்கு பறந்து விமானம் எது என்று சோதனை நடத்தப்பட்டது. கடைசியில் அது தெலுங்கானா ஏவியேஷன் அகாடமிக்கு சொந்தமான விமானம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை முயற்சிக்காக அந்த விமானம் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த வீட்டின் உரிமையாளர் கணேஷ் தெரிவித்து இருக்கிறார். ஆனால் வீட்டின் கண்ணாடிகளும், மாடியில் இருந்த தண்ணீர் தொட்டியும் மட்டும் உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A low range flying aircraft over Hyderabad wobbled in the air before one of its metal doors fell off and crashed onto the empty terrace of a house's building.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற