காந்தி கொலையில் புது குண்டு போட்ட ஆர்.எஸ்.எஸ். சதிதிட்டம் தவிடுபொடி...மகிழ்ச்சியில் இந்து மகாசபை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். சதித்திட்டம் தவிடுபொடியாகிவிட்டது- வீடியோ

  மீரட்: மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமே 4-வது குண்டு என கதைவிட்ட ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சதித்திட்டம் தகர்ந்து போனது என அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா 'மகிழ்ச்சி' தெரிவித்துள்ளார்.

  மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மும்பை பங்கஜ் பத்னிஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதற்காக நியமிக்கப்பட்ட அமரேந்தர் சரண், கோட்சேதான் காந்தியை கொலை செய்தார், ஆகையால் மறுவிசாரணை தேவை இல்லை என உச்சநீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டார்.

  இதனை அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அசோக் சர்மா தெரிவித்துள்ளதாவது:

  பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த சதி

  பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்த சதி

  மகாத்மா காந்தியை கொலை செய்தது எங்களது இந்து மகாசபைதான். ஆனால் இந்த பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் 4-வது குண்டுதான் காந்தி மரணத்துக்கு காரணம் என ஆர்.எஸ்.எஸ்., பாஜக சதித் திட்டம் தீட்டி வழக்கு தொடர்ந்தது,. ஆனால் இந்த முயற்சி இப்போது தவிடு பொடியானது,

  காந்தி கொலைக்கு பின் பிரிவு

  காந்தி கொலைக்கு பின் பிரிவு

  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தாய் அமைப்புதான் இந்து மகாசபை. 1948-ம் ஆண்டு காந்தி படுகொலைக்குப் பின்னர் இந்து மகாசபையுடனான தொடர்புகளை ஆர்.எஸ்.எஸ். துண்டித்துக் கொண்டது,

  உண்மையான துரோகிகள்

  உண்மையான துரோகிகள்

  பின்னர் ஜஹவர்லால் நேருவுடன் இணைந்து கொண்டு காந்தி படுகொலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஒதுங்கிக் கொண்டது. இந்து மகாசபையைக் கைவிட்ட உண்மையான துரோகிகள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர்தான்.

  அழிக்க நினைத்தது

  அழிக்க நினைத்தது

  இப்போது காந்தி படுகொலையை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். காந்தி படுகொலையில் இருந்தே எங்களிடம் ஒதுங்கிக் கொண்டு எங்களை அழிக்க நினைத்ததும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்.

  இவ்வாறு பண்டிட் அசோக் பண்டிட் சர்மா கூறினார்,

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Akhil Bhartiya Hindu Mahasabha vice-president Pandit Ashok Sharma slammed RSS and BJP on Gandhi assassination row. He said that the RSS and BJP is attempting to snatch the Credit of Gandhi Killing from Hindu Mahasabha.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X