For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதவாத சக்திகளை தோற்கடிக்க கூட்டணி விவகாரத்தில் விட்டு கொடுக்க தயார் - அகிலேஷ் அதிரடி

Google Oneindia Tamil News

லக்னோ: மதவாத சக்திகளை தோற்கடிக்க கூட்டணி விவகாரத்தில் விட்டு கொடுக்க தயாராக உள்ளதாக அகிலேஷ் யாதவ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை தோற்கடித்த மற்ற கட்சிகள் யூகம் வகுத்து வருகின்றன. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியோ எங்களுக்கு மரியாதைக்குரிய வகையில் சீட்டுகளை பங்கிடும் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என கூறியிருந்தார்.

Akhilesh Yadav gives consent to Mayawatis remark

இந்நிலையில் இதுகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில் பாஜகவை வெற்றி பெற விடாமல் தடுத்த கூட்டணியில் இறங்கி வர தயார். இந்த வார்த்தைகள் கடைசி வரை இருக்கும்.

தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு, பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைப்பதில் பெரும் பொறுப்பு உண்டு. அவர்கள் தேசிய கட்சி, ஆனால் நாங்கள் தேசிய கட்சி அல்ல. பாஜகவுக்கு மிகப்பெரிய மார்பு இருப்பதாக அவர்கள் கூறிக் கொண்டால் காங்கிரஸுக்கு குறைந்தபட்சம் பெரிய இதயமாவது இருக்க வேண்டும்.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி என்று அமித்ஷா கூறியுள்ளார். 50 ஆண்டுகள் என்பது ரொம்ப அதிகம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால் 50 வாரங்களில் அவர்கள் தங்கள் முடிவை கொடுப்பர். எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவுகளுக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன என்றார் அவர்.

English summary
Samajwadi Party (SP) national president Akhilesh Yadav on Sunday said he is ready to take two steps back in order to defeat communal forces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X