டெல்லி, மும்பை, பெங்களூருவில் தாக்குதல் நடத்த அல்-கொய்தா திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
டெல்லி: டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அல்-கொய்தா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதை அடுத்து டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் நகர டி.ஜி.பி. மற்றும் காவல் துறை ஆணையாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அந்த நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சுற்றுலாத்தலங்கள், புராதன கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகிய இடங்களை அல்-காய்தா அமைப்பினர் குறிவைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற தாக்குதலையடுத்து, இந்தியாவின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அல்-கொய்தாவின் இந்தியப் பிரிவை துவக்குவதாகக் கூறி கடந்த வருடம் செப்டம்பரில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மான்-அல்-ஜவாகிரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் இந்தியாவின் குஜராத், அஸ்ஸாம், அஹமதாபாத், காஷ்மீர் போன்ற இடங்களில் இஸ்லாமிய மக்கள் ஒடுக்கப்படுவதாகவும் அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், உளவுத்துறையின் தற்போதைய எச்சரிக்கை காரணமாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications