For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அதிரடி

மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்து இருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் நடந்த இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக கட்சி படுதோல்வி அடைந்தது. கடந்த 4 வருடங்களில் நடந்த பல நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் பாஜக வரிசையாக தோல்வி அடைந்துள்ளது.

All set for a no-confidence motion against Modi government says YSR Congress

மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த போது 282 உறுப்பினர்கள் இருந்தார்கள். 30 வருடங்களுக்கு பின் பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

ஆனால் தற்போது தொடர் தோல்விகளால் பெரும்பான்மையை இழந்து வரும் நிலையில் இருக்கிறது. தற்போது பாஜக கட்சிக்கு 274 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மெஜாரிட்டிக்கு 272 உறுப்பினர்கள் தேவை.

இந்த நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த சில உறுப்பினர்கள் அந்த கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்து தற்போது மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மக்களவையில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

English summary
All set for a no-confidence motion against Modi government says YSR Congress. YSR Congress decides to bring no-confidence motion against Modi government tomorrow in Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X