Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் சாமியாரா? எனக்கு 90 வயசா? புலம்பி தள்ளிய கிரிஷ்.. வைரல் ஜோடி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கேரளா: தனக்கும் நடிகை திவ்யாவுக்கும் நடந்தது திருட்டுக் கல்யாணம் இல்லை என்றும் உண்மையில் என்ன நடந்தது என்றும் மிக நீண்ட ஒரு விளக்கத்தை நடிகர் கிரிஷ் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகர் கிரிஷ் வேணுகோபால் மற்றும் நடிகை திவ்யா ஜோடிக்கு நடந்த கல்யாணம் பற்றிப் பேசாத ஊடகங்கள் இல்லை. 90 வயது கிழவர் ஒருவர் இளம் பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார் என்று காதில் புகைவரும் அளவுக்கு கதைவிட்டு எழுதி இருந்தார்கள். இந்த ஜோடி பற்றி பஞ்சாப் ஊடகம் வரை செய்தி வைரலாகிவிட்டது. ஒவ்வொரு செய்தியிலும் ஒவ்வொரு கதை. ஒவ்வொரு வயது போடப்பட்டிருந்தது. உண்மையில் இந்தக் கிரிஷூக்கு என்ன வயது? அவர் பிரம்மச்சாரியா? சாமியாரா? என அனைத்திற்கும் மனம் திறந்து பதிலளித்திருக்கிறது இந்த ஜோடி.

malayalam cinema

தங்களின் கல்யாணம் நாள், நட்சத்திரம் பார்த்து முறையாக நடந்ததுதான். திருட்டு கல்யாணம் இல்லை என்ற விளக்கத்தோடு பேட்டி அளித்திருக்கிறார் கிரிஷ். அவர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "பல 'தாத்தா நடிகர் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டார்' என்று டைடில் போட்டு எழுதி இருந்தார்கள். என்னை ஏன் தாத்தா நடிகர் என்று எழுதினார்கள் என்றால், நான் அதிகமாக தாத்தா வேஷம்தான் போட்டிருக்கிறேன். 'ஆஹா கல்யாணம்' படத்தில் எப்படி தாத்தா கேரக்டரில் நடித்தேனோ அதே மாதிரியான வேடத்தில்தான் நான் மலையாளத்தில் நடித்து வருகிறேன். அதனால்தான் நான் தாத்தா நடிகர். நிஜமாக நான் தாத்தா இல்லை.

அடுத்து ரகசிய கல்யாணம் என்று பல ஊடகங்களில் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ரகசியமாகக் கல்யாணம் பண்ணவில்லை. உடன் பெற்றோர்கள் முன்னிலையில் குருவாயூர் கோயிலில் எல்லோருக்கும் தெரிந்து நடந்தக் கல்யாணம். அது எப்படி ரகசியமாகும்? " என்று பொங்கி எழுந்து பேசி இருக்கிறார் கிரிஷ்.

தொடர்ந்து பேசிய அவர், "வேறு சிலர் என்ன பிரம்மச்சாரி நடிகர் என்கிறார்கள். நான் நித்திய பிரம்மச்சாரி கிடையாது. எனக்கு முன்பே ஒரு கல்யாணம் நடத்தது. 2022இல் சட்டப்படி விவாகரத்து பெற்றுவிட்டேன். ஒரு வருடம்தான் தனியாக வாழ்ந்தேன். நான் இன்ஜினியர் படித்துவிட்டு 14 வருடம் தமிழ் எஃப்.எம்.இல் வேலை பார்த்தேன். சில ஷாட் ஃபிலிம் இயக்கு இருக்கிறேன். சினிமா டைரக்டர் என்பது என் கனவு. என் மனைவி திவ்யா தமிழில் நடித்திருக்கிறார்.

இந்த வயசான தாத்தா எப்படி இந்தச் சின்ன பாப்பாவை தள்ளிக் கொண்டு போய்விட்டார் என பலர் கவலைப்படுகிறார்கள். எனக்கு வருக்கும் 9 வயசுதான் வித்தியாசம். என் அப்பா, அம்மா கல்யாணம் செய்து கொள்ளும்போது அவர்களுக்குள் 12 வயது வித்தியாசம் இருந்தது. என் மனவியும் நானும் வயதுக்கு வந்தவர்கள். 19 வயதைக் கடந்துவிட்டோம். அப்படி இருக்கும்போது சாமியார் எப்படி சின்ன பாப்பாவை தள்ளிக் கொண்டு போனார் என ஏன் சொல்கிறார்கள் என்பது எனக்கே புரியவில்லை. எங்கள் கல்யாண படத்தை நாங்களே வெளியிடாமல் எப்படி படங்கள் கிடைக்கும்? படங்கள் போட்டு கல்யாணத்தை ஊருக்கே சொன்ன பிறகு அது எப்படி ரகசியமாகும்?

malayalam cinema

4 அக்டோபர் 1975 தான் என் பிறந்த தேதி. எனக்கு 90 வயசு எல்லாம் கிடையாது. முதல்ல பிடெக் சிவில் படித்தேன். அதற்குப் பிறகு மேற்படிப்பு முடித்து துபாயில் வேலை பார்த்தேன். பின்னர் சினிமா சம்பந்தமாகப் படித்தேன். வெப் டிசைனராக இருந்துள்ளேன். மீண்டும் எம்.எஸ்.சி, சைகாலஜி முடித்தேன். அடுத்து எல்.எல்.பி படித்தேன். இப்போது எல்.எல்.எம் படித்துக் கொண்டுள்ளேன். இவை போக மீடியா சைக்காலஜியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். இதுவரை 87 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். 22 படங்களில் நடித்து இருக்கிறேன். 24 சீரியல்களில் நடித்து இருக்கிறேன்.

அதேபோல் என் மனைவி திவ்யா ஒரு நடிகை. 20 படங்கள் மேல் நடித்திருக்கிறார். அவர் 1984இல் பிறந்தவர். எனக்கு 49வயசு. மனைவிக்கு 40வயசு. இதுதான் எங்கள் முழு ஜாதகம். இதில் யாருக்கு என்ன பிரச்சினை? என் தாடிதான் பிரச்சினை என்றால் நான் ஒன்றுமே செய்ய முடியாது. வெள்ளை தாடிக்கு நான் கருப்பு சாயம் அடிப்பது கிடையாது" என்கிறார்.

பலர் என் பணத்துக்காகத்தான் திவ்யா ஆசைப்பட்டு என்னைக் கட்டிக் கொண்டார் என எழுதி இருக்கிறார்கள். நான் அவ்வளவு பணக்காரன் இல்லை. என் பேங்க் பேலன்ஸ் கேட்டால் நீங்களே வெறுத்துப் போய்விடுவீர்கள். நாங்கள் மனப்பூர்வமாக விரும்பி இணைந்திருக்கிறோம். அதான் உண்மை.

தங்களின் திருமணம் பற்றி மனம் திறந்து பேசிய திவ்யா, "நானும் கிரிஷூம் சீரியலில் சேர்ந்து நடித்திருக்கிறோம். அவரது தங்கையும் நானும் நண்பர்களாக இருந்தோம். அப்போது பேச்சு வாக்கில் ஒருநாள் உங்கள் அண்ணா அழகாக இருக்கிறார் என்றேன். அவர், 'அப்படியா? அவரைக் கல்யாணம் பண்ணிக்கோ' என்றார். விளையாட்டா சொல்றீயா என நான் கேட்டதற்கு, இல்லை உண்மையாகச் சொல்கிறேன் என்றார். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளைக் கேட்டுவிட்டு, விருப்பத்தைச் சொல்கிறேன் என்று சொன்னேன். மகள் சம்மதித்ததால் திருமணம் செய்து கொண்டோம்' என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+