எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அமித்ஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

குஜராத் மாநிலத்தின் ராஜ்ய சபா எம்பிகளுக்கான 3 இடங்கள் காலியாகின. அதற்கான தேர்தல் முறைப்படி அறிவிக்கப்பட்டது. அதில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, ஸ்மிருதி இரானி ஆகியோரும், காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.

Amit Shah resigns as MLA

இந்தத் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 2 பேர் பாஜகவிற்கு வாக்களித்ததால் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. இதனையடுத்து நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதன் முடிவில், அமித்ஷா, ஸ்மிருதி இரானி, அகமது பட்டேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமித்ஷா, குஜராத்தின் நாரன்பூரா தொகுதி எம்எல்ஏ பதவியை இன்று முறைப்படி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதம் குஜராத் ஆளுநரிடம் அமித்ஷா அளித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP President Amit Shah today, resigned from Gujarat Vidhan Sabha as its member.
Please Wait while comments are loading...