எதியூரப்பா அரசுதான் ஊழலில் முதலிடம்... அமித்ஷா உளறலால் கர்நாடகா பாஜக 'ஷாக்'
எதியூரப்பாவை ஊழல்வாதி என அமித்ஷா குறிப்பிட்டது பெரும் சர்ச்சையாகிவிட்டது.
பெங்களூரு: மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எதியூரப்பா அரசுதான் முதலிடம் பிடிக்கும் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அமித்ஷா வாய் தவறி குறிப்பிட்டாலும் தேர்தல் நடைபெறும் நிலையில் கர்நாடகா பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
தென்னிந்தியாவில் கர்நாடகாவில்தான் பாஜக முதன் முதலில் 2008-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் சட்டவிரோத சுரங்க அனுமதி புகாரில் சிக்கி எதியூரப்பா முதல்வர் பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒரு கட்டத்தில் பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சி நடத்தினார் எதியூரப்பா. பின் மீண்டும் பாஜகவில் ஐக்கியமானார் எதியூரப்பா. தற்போது மே 12-ந் தேதி நடைபெறும் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார் எதியூரப்பா.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகாவில் முகாமிட்டிருக்கிறார் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா. பெங்களூருவில் இன்று செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார்.
Who knew @AmitShah could also speak the truth- we all concur with you Amit ji @BSYBJP is the most corrupt! pic.twitter.com/GFbTF3Mg7H
— Divya Spandana/Ramya (@divyaspandana) March 27, 2018
அப்போது, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார் அமித்ஷா. மேலும், மிக மோசமான ஊழல் அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எதியூரப்பா அரசுக்குதான் முதலிடம் என அமித்ஷா கூற அருகே இருந்த பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து சித்தராமையா அரசு என திருத்தினர்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, அமித்ஷா உண்மையை உரக்கச் சொல்லிவிட்டார் என அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications