வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் அனுப்பிய அலிகார் பல்கலை. பேராசிரியர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அலிகார்: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தனது மனைவி வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் என கூறி திருமண உறவை முறித்தது விவாத பொருளாகி இருக்கிறது.

முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண பந்தத்தை விட்டு விலக முத்தலாக் என்று கூறுவது அந்த மதத்தின் சட்டமாகும். இந்த சட்டத்தை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த முத்தலாக் விவகாரம் பின்பற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடுத்துள்ளார்.

AMU Professor Gives Triple Talaq to Wife on Whatsapp

முத்தலாக் விவகாரம் சட்டத்துக்கு புறம்பானது என்று கடந்த ஆகஸ்ட் 22-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசியர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் தனது மனைவிக்கு முத்தலாக் என்று அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காலித் பின் யூசுப் கான், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். தனது மனைவி யாஸ்மீன் அவரது படிப்பு குறித்து தன்னிடம் பொய் கூறியதாகவும் அவர் பட்டப்படிப்பு கூட படிக்க வில்லை என்றும் இதுபோல் ஏராளமான உண்மைகளை அவர் மறைத்ததால் அவருடன் வாழ பிடிக்கவில்லை என்று கூறி அவரையும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். இதையடுத்து யாஸ்மீனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் முத்தலாக் கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A professor of Aligarh Muslim University on Sunday gave Triple Talaq to his wife Yasmeen Khalid on Whatsapp.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற