Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'உலகம் சுற்றிய வாலிபன்'.. டீக்கடை நடத்தியே மனைவியுடன் பல நாடுகளுக்கு பயணித்த கேரள முதியவர் மரணம்!

Subscribe to Oneindia Tamil

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கே.ஆர்.விஜயன்(71). இவரது மனைவி மோகனா. கே.ஆர்.விஜயன் கொச்சியில் டீக்கடை நடத்தி வந்தார். டீக்கடை நடத்தியே அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு மனைவியுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து புகழ்பெற்ற கே.ஆர்.விஜயன் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

'ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்' என்ற டீக்கடையை நடத்தி வந்த கே.ஆர்.விஜயனுக்கு இப்படியே முழு நேரமும் கடையில் இருப்பது சலிப்பையை தட்டியது. இதனால் உலகம் முழுவதும் சுற்றி பார்க்க ஆசைப்பட்டார். இதற்காக கடையில் கிடைக்கும் வருமானத்தை சேமித்து வைத்துக் கொண்டார்.

உலகம் முழுவதுமே பிரபலமானார்

உலகம் முழுவதுமே பிரபலமானார்

இதனை தொடர்ந்து தனது மனைவியுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தார். கடந்த 2007-ம் ஆண்டு கணவன்-மனைவி இருவரும் இஸ்ரேலுக்கு பயணம் செய்தனர். இதுவே இவர்களின் முதல் வெளிநாட்டு பயணமாகும். அதன்பிறகு கே.ஆர்.விஜயன் ஒவ்வொரு நாடுகளுக்கும் மனைவியுடன் பயணம் செய்து கேரள மாநிலத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலமானார். ஏன் உலகம் முழுவதுமே பிரபலமானார்.

26 நாடுகளுக்கு பயணம்

26 நாடுகளுக்கு பயணம்

கடந்த 14 ஆண்டுகளில் கே.ஆர்.விஜயன் மனைவியுடன் 26 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பயணம் செய்வதற்காக டீக்கடையில் இருந்து வரும் வருமானத்தில் தினமும் ரூ.300 சேமித்து வந்துள்ளார். மேலும், சுற்றுலா செல்வதற்காகவே வங்கியில் கடன் பெற்று அந்தக் கடனையும் முறையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளார் விஜயன். வங்கி நிர்வாகமும் தொடர்ந்து சுற்றுலா செல்ல கடன் அளித்து உதவி புரிந்தது.

நிதி உதவி செய்து ஊக்கம்

நிதி உதவி செய்து ஊக்கம்

இந்த ஜோடி உலகம் முழுவதும் பயணம் செய்யும் செய்தி வைரலானதால், பல்வேறு தொழிலதிபர்கள் இவர்களுக்கு நிதி உதவி செய்து ஊக்கமளித்தனர். பலர் வெளிநாடுகளில் இவர்கள் தங்குவதற்கு வசதியும் செய்து கொடுத்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் ரஷ்யாவிலிருந்து விஜயனும், அவரின் மனைவி மோகனாவும் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கேரளா திரும்பினர். அடுத்ததாக, ஜப்பான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்த நிலையில் கே.ஆர்.விஜயன் எதிர்பாராதவிதமாக காலமாகி விட்டார்.

துணிச்சல் பயணி

துணிச்சல் பயணி

கே.ஆர்.விஜயன் தனது தேநீர்க் கடையில் இதுவரை சென்ற 26 நாடுகள், 6 கண்டங்கள், அதன் புகைப்படங்கள், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் கடையில் வைத்திருந்தார். இதைப் பார்ப்பதற்காகவே இவரின் கடைக்கு ஒரு கூட்டம் வரும். கே.ஆர்.விஜயன் காலமானதால் அவரது கடை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சோகம் நிலவுகிறது. கே.ஆர்.விஜயனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கேரள சுற்றுலாத் துறை தனது ட்விட்டர் பக்கத்தில் விஜயனின் புகைப்படத்தைப் பதிவிட்டு, "இறுதிப் பயணத்தைத் தொடங்கிய துணிச்சல் பயணி'' என்று கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+