For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷாக்கிங்... எக்ஸ்ட்ரா போதைக்காக.. நாட்டு மதுவுடன் சானிடைசர்... ஆந்திராவில் 10 பேர் பலி!

Google Oneindia Tamil News

பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் அதிக போதை ஏற வேண்டும் என்பதற்காக நாட்டு மதுபானத்தில் சானிடைசரை கலந்து குடித்த 10 பேர் உயிரிழந்தனர். இது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரமாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் குறிசெடு என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதிகமாக போதை ஏற வேண்டும் என்பதற்காக நாட்டு மதுபானத்தில் சானிடைசர் கலந்து சிலர் குடித்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் இறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பேர் பிச்சைக்காரர்கள் என்பதும் மற்றவர்கள் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Andhra Pradesh: 7 persons have died after Consuming Hooch Laced With Sanitiser

இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஐந்து பேர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஐந்து பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும்போது இறந்தனர்.

கொரோனா கால கட்டத்தில் பலரும் தங்களுக்கு மது கிடைக்கவில்லை என்பதாலும், அதிக போதை ஏற வேண்டும் என்பதாலும், சானிடைசரை குடிக்கின்றனர். ஆந்திராவின் பல்வேறு இடங்களில் சானிடைசர் குடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு செல்ல இ-பாஸ் எப்படி வாங்குவது.. என்ன நடைமுறை... அதிகாரிகள் விளக்கம்திருமணத்திற்கு செல்ல இ-பாஸ் எப்படி வாங்குவது.. என்ன நடைமுறை... அதிகாரிகள் விளக்கம்

சானிடைசரில் இருக்கும் விஷத்தன்மை குடித்தவுடன் சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தும். சிலருக்கும் வாழ் நாள் முழுவதும் சிறிது சிறிதாக குடல், கல்லீரல் ஆகியவற்றில் சிக்கலை உருவாக்கும். ஆதலால், சானிடைசர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Recommended Video

    Sonu Sood Gifts Tractor to a Farmer Family

    விஜயவாடா மாவட்டத்தில் மட்டும் கடந்த ஜூலை 20 ஆம் தேதி வரை சானிடைசர் குடித்த ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர்.

    English summary
    Andhra Pradesh: 10 persons have died after Consuming Hooch Laced With Sanitiser
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X