Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் முதல்முறையாக பரவிய ஓமிக்ரான்!.. இந்தியாவில் 37 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது போல் சண்டீகரில் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இவர்களுடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இது மிகவும் கொடியது என்பதால் வெளிநாடுகளிலிருந்து வருவோர் விமான நிலையங்களில் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.

அந்த வகையில் 20 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய ஓமிக்ரான் இந்தியாவில் பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் முதல்முறையாக கடந்த 2ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

Andhra Pradesh reports first Omicron case

கர்நாடகா மாநிலத்தில் விமான நிலையத்தில் 66 வயது மற்றும் 46 வயதுடைய இருவருக்கு ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் ஓமிக்ரான் பரவியுள்ளது.

ஏற்கெனவே டான்சானியாவிலிருந்து டெல்லி வந்த ஒரு இளைஞருக்கு ஓமிக்ரான் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஜிம்பாப்வேயிலிருந்து டெல்லிக்கு வந்த ஒருவருக்கு ஓமிக்ரான் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டது. இவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தென்னிந்தியாவில் முதல்முறையாக கர்நாடகாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது ஆந்திராவிலும் ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அயர்லாந்திலிருந்து மும்பை வழியாக விசாகப்பட்டினத்திற்கு கடந்த 27ஆம் ஆண்டு 34 வயது இளைஞர் வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அது உறுதியானதால் ஓமிக்ரான் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஓமிக்ரானும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு டிசம்பர் 11ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் ஓமிக்ரான் சோதனை மேற்கொண்ட போது நெகட்டிவ் என வந்தது. இதனால் அந்த இளைஞருக்கு தற்போது வைரஸ் தொற்று நீங்கவிட்டதாகவும் ஆந்திர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அது போல் இத்தாலியிலிருந்து சண்டீகர் வந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா கடந்த 1ஆம் தேதி உறுதியானது. இவருக்கு ஓமிக்ரான் சோதனை மேற்கொண்டதில் ஓமிக்ரான் உறுதியானது.

இந்தியாவில் முதல்முறையாக ஓமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட கர்நாடகாவில் மேலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த 34 வயது இளைஞருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவருடன் இருந்த முதன்மை தொடர்புகள் 5 பேரும், இரண்டாம் நிலை தொடர்புகள் 15 பேரும் கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம் கர்நாடகாவில் ஓமிக்ரான் பாதிப்புகள் 3ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    Bangalore Omicron நோயாளிகளிடம் இருக்கும் அந்த ஒற்றுமை | Oneindia Tamil

    அது போல் மகாராஷ்டிராவின் நாக்ரபூரில் முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 40 வயது இளைஞர் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திரா, சண்டீகர், கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் பாதித்த நிலையில் அவர்களுடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+