நடுரோட்டில் மகளை வெட்டிய தந்தை.. ஹைதராபாத்தில் அடுத்த ஆணவ கொலை முயற்சி.. அதிர வைக்கும் வீடியோ!
ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரும், அவரது மனைவியும் ஜாதி மாறி திருமணம் செய்த காரணத்தால் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவரும், அவரது மனைவியும் ஜாதி மாறி திருமணம் செய்த காரணத்தால் மோசமாக தாக்கப்பட்டு இருக்கிறார்கள். நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டப்பட்டு இருக்கிறார்கள்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சந்தீப் தில்டா, 24 வயது நிரம்பிய இவர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர். இவரும் மாதவி என்ற வேறு சாதியை (ஓசி பிரிவு) சேர்ந்த பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து இருக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் திருமணத்திற்கு எப்போதும் போல, பெண்ணின் தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. மாதவியின் தனத்தை மனோகர் சாரி, சந்தீப்பின் ஜாதியை காரணம் காட்டி இந்த திருமணத்திற்கு மறுத்து இருக்கிறார்.

திருமணம் நடந்தது
இந்த நிலையில் சந்தீப் இதுகுறித்து போலீஸில் புகார் அளித்து இருக்கிறார். பின் போலீஸ் இந்த விஷயத்தில் தலையிட்டு, இருவரும் மேஜர், திருமணம் செய்வதில் தவறில்லை என்றுள்ளனர். பின் கடைசியாக மாதவியின் தந்தை மனோகரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

தலையை வெட்டினார்
ஆனால், அவர் கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்வது போல நடித்தது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதவியும் அவரது கணவர் சந்திப்பும் மார்க்கெட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்று உள்ளனர். ஏராகடா பகுதியில் இருக்கும் அந்த மார்க்கெட்டிற்கு வந்த மாதவியின் அப்பா மனோகர் சாரி, அங்கேயே வைத்து இரண்டு பேரையும் அரிவாளால் வெட்டினார்.
|
வெட்டும் வீடியோ
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஹெல்மெட்டை எடுத்துவிட்டு வரும் மனோகர் சாரி, முதலில் அரிவாளால் சந்தீப்பை வெட்டுகிறார். அவர் கீழே விழுந்ததும், தன்னுடைய மகள் மாதவியை வெட்டுகிறார். அதன்பின் மாதவியை தொடர்ந்து வெட்டுகிறார். இந்த நிலையில் ஒரு நபர் வந்து அவரை உதைத்துவிட்டு செல்கிறார்.

எப்படி இருக்கிறார்கள்
தற்போது இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் மாதவி மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக சந்தீப் உடல் தேறி வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன்
சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமார், அம்ருதவர்ஷினி திருமணமும் அதற்கு பின்பான பிரணாய் குமார் கொலையும் இந்தியாவையே அதிர செய்தது. தெலுங்கானாவை சேர்ந்த பிரணாய் குமார், அம்ருதவர்ஷினி என்ற வேறுசாதி பெண்ணை திருமணம் செய்ததால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் சூடு அடங்கும் முன் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications