For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிவி ஊடகவியலாளர்களுக்கு "ஜெயில்" பேச்சால் சர்ச்சை.. பம்முகிறார் கேஜ்ரிவால்

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மத்தியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் மோடிக்கு ஆதரவான ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை நடத்தி சிறைக்கு அனுப்புவோம் என்று தாம் பேசியது திரிக்கப்பட்டுவிட்டதாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

ஆம் ஆத்மிக்கு ரூ,10,000 நன்கொடை அளித்தவர்களுடன் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கேஜ்ரிவால் பேசிய, பணத்துக்கு ஆசைப்பட்டு விரிக்கப்பட்ட வலையில் மோடிக்கு ஆதரவாக ஒட்டுமொத்த டிவி சேனல்களும் விலை போய்விட்டன. இது பெரும் அரசியல் சதி.

‘Anti-democratic, intolerant mindset that resists scrutiny’

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இது குறித்து விசாரணை நடத்தி சதியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாமல் அதில் தொடர்புடைய அனைவரையும் சிறையில் அடைப்போம்.

கடந்த ஓராண்டாக எந்த டிவி சேனலைப் பார்த்தாலும், மோடி பற்றிய செய்திகள்தான் ஒளிபரப்பப்படுகின்றன. மோடியை முன்னிலைப்படுத்துவதற்காக டிவி சேனல்களுக்கு பெரும் பணம் கைமாறியுள்ளது என்றார்.

கேஜ்ரிவாலின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேஜ்ரிவாலின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் டிவி சேனல்கள் குறித்து நான் அப்படியெல்லாம் பேசவில்லை; எதுவுமே கூறவில்லை. மீடியாக்களைப் பார்த்து நான் ஏன் வருத்தம் கொள்ளவேண்டும்?' என்று கேஜரிவால் நேற்று விளக்கம் அளித்திருக்கிறார்.

English summary
Aam Aadmi Party and its leader Arvind Kejriwal came under fire from journalists’ groups for his remarks at a Nagpur fundraiser that some TV channels have been bought over by Narendra Modi to project him as Prime Minister and that he would send media persons to jail if a probe found them guilty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X