பாலம் கட்டும் பணிக்கு ராணுவத்தை பயன்படுத்த நிர்மலா சீதாராமன் முடிவு.. மாஜி ராணுவ வீரர்கள் எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் இருக்கும் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் நடைபாதை பாலம் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மும்பையில் பாலம் காட்டும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராணுவ வீரர்கள் போர் கொடி உயர்த்தி இருக்கின்றனர். மேலும் முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் இதற்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் ராணுவ வீரக்ள அவசர கால பணிகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நிறைய ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

 பாலம் கட்ட ராணுவம்

பாலம் கட்ட ராணுவம்

மும்பையில் இருக்கும் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் நடைபாதை பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதையடுத்து இந்த பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். இதற்காக மும்பையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு சொந்தமான மும்பை பொறியாளர்கள் குழுவில் இருந்து ராணுவ வீரர்கள் வரவழைக்க படுவார்க்ள என்று கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்த பகுதியை பார்வையிட்டு பாலம் கட்டும் வேலையில் இறங்குவார்கள் என்று கூறப்பட்டது.

 ராணுவ வீரர்கள் போர்க்கொடி

ராணுவ வீரர்கள் போர்க்கொடி

இதையடுத்து நிர்மலா சீதாராமினின் இந்த கருத்துக்கு தற்போது பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளனர். ராணுவ வீரர்கள் அனைவரும் பாதுகாப்பு துறையின் விதி முறைகளை வேலை செய்யும் சமயத்தில் பின்பற்ற வேண்டும் என்பதால் அமைதியாக இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். மேலும் வேலை செய்யும் காலத்தில் நாங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை, வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பின்பும் தங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை என்று கூறியிருக்கின்றனர்.

 அவசரத்திற்கு மட்டுமே ராணுவம்

அவசரத்திற்கு மட்டுமே ராணுவம்

இந்த நிலையில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் பூரி இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''ராணுவம் நேர்மையாக நடத்தப்பட வேண்டும். எல்லா வேலைக்கும் அவர்களை அழைக்க கூடாது. நாட்டில் ஏதாவது அவசரம் ஏற்பட்டால் மட்டுமே ராணுவம் அழைக்கப்பட வேன்டும்" என்று கூறியிருக்கிறார்.

 நாங்கள் பாதுகாப்பிற்கு மட்டும்தான்

நாங்கள் பாதுகாப்பிற்கு மட்டும்தான்

அதேபோல் ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் லெப்டினென்ட் ஜெனரல் பக்சி இது குறித்து கடுமையாக எதிர்த்து பேசியிருக்கிறார். அதில் '' ராணுவம் நாட்டில் எப்போது கடைசியாகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும். இது போன்ற பாலம் காட்டும் வேளையில் எல்லாம் ஈடுப்படுத்தப்படக்கூடாது. சில நாட்களுக்கு முன் யோகா தினத்தில் பாய் விரிக்கும் பணிக்கு எல்லாம் அழைக்கப்பட்டார்கள்'' என்று தெரிவித்து வருத்தப்பட்டார்.

 பாதுகாப்புத்துறை எதிர்ப்பு

பாதுகாப்புத்துறை எதிர்ப்பு

இந்த நிலையில் லெப்டினென்ட் ஜெனரல் எச். எஸ் பனாக் இதுகுறித்து கோபமாக பேசும் போது ''இந்த நாட்டில் ரயில்வே துறையும் , மத்திய அரசும் தோற்றுவிட்டது. அந்த மாநிலத்தை ஆளும் அரசும் இந்த தோல்வியில் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த கருத்துக்கு பாதுகாப்பு துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Defence minister Nirmala Sitharaman’s has announced that Army would be involved in building Footover Bridge at Mumbai. Army men became upset over involvement of military in Mumbai rail bridge.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற