For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாக். சார்க் மாநாட்டை புறக்கணிக்கும் அருண் ஜேட்லி.... நரகம் என சாடும் மனோகர் பாரிக்கர்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் நடைபெற உள்ள சார்க் நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் வரும் 25ம், 26ம் தேதிகளில் சார்க் உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாடு நடைபெற உள்ளது. ஆனால் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இம்மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Arun Jaitley likely to skip Saarc meeting, Parrikar compares Pak to hell

இதனை முறைப்படி பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்றும் நிதி அமைச்சக வாட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பாகிஸ்தானுக்கு போவது என்பது நரகத்திற்கு போவது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அருண் ஜேட்லி இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கு காரணம் ஏற்கனவே சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உரிய மரியாதை வழங்காமல் பாகிஸ்தான் அவமதித்ததுதான் காரணம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English summary
Arun Jaitley is not expected to join the meeting of finance ministers of the regional grouping in Islamabad during August 25-26, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X