ஜேட்லி, மீரா குமார், சிபல், விஜயசாந்தி, நக்மா, குர்ஷித் தோல்வி
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பாஜக தலைவர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் தலைவர்கள் மீரா குமார், கபில் சிபல், சல்மான் குர்ஷித், நடிகைகள் நக்மா, விஜயசாந்தி ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் இந்த தேர்தலில் தோல்வி அடைந்த சில பிரபலங்களை பார்ப்போம்.

அருண் ஜேட்லி
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போட்டியிட்ட பாஜக தலைவர் அருண் ஜேட்லியை காங்கிரஸ் வேட்பாளரான அமரிந்தர் சிங் 89 ஆயிரத்து 434 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

மீரா குமார்
பீகார் மாநிலம் சாசரத்தில் போட்டியிட்ட சபாநாயகர் மீரா குமார் பாஜக வேட்பாளரான சீடி பாஸ்வானிடம் தோல்வி அடைந்துள்ளார்.

சல்மான் குர்ஷித்
உத்தர பிரதேச மாநிலம் பரூகாபாத்தில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் தோல்வி அடைந்துள்ளார். அவர் பரூகாபாத் சிட்டிங் எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.

கபில் சிபல்
டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் பாஜக வேட்பாளரான ஹர்ஷ் வர்தனிடம் தோல்வி அடைந்துள்ளார்.

நக்மா
காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் போட்டியிட்ட நடிகை நக்மாவை பாஜக வேட்பாளரான ராஜேந்திர அகர்வால் 1 லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

விஜயசாந்தி
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து காங்கிரஸுக்கு தாவி தெலுங்கானாவில் உள்ள மெடக் தொகுதியில் போட்டியிட்ட நடிகை விஜயசாந்தி தோல்வி அடைந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications