For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெஜ்ரிவால் ராஜினாமா: நாடாளுமன்ற தேர்தலுடன் டெல்லி சட்டசபை தேர்தல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் ஆவதில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலகினார். முகேஷ் அம்பானியின் கைப்பாவைகளாக பாரதீயஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும்என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்ய முடியாமல் போனதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக ஆம் ஆத்மி கட்சியின் அவசரக் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக, ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் முன் திரண்டிருந்த தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும் தாம் தவறு ஏதும் செய்திருந்தால் தம்மை மன்னிக்குமாறு கெஜ்ரிவால் கூறியபோது, அவரது ஆதரவாளர்கள், "இல்லை...இல்லை!" என்று கூறினார்கள்.

பா.ஜனதா - காங்கிரஸ்

பா.ஜனதா - காங்கிரஸ்

தொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், சமையல் எரிவாயு விலை நிர்ணயம் விவகாரத்தில் முகேஷ் அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததும், ஆம் ஆத்மி அரசு தனது பக்கத்தில் கிடக்கும் முள் செடி என்று அம்பானி கூறினார் என்றும், ஜன் லோக்பால் மசோதா நிறைவேறினால் தங்களில் பாதிப்பேர் சிறையில் தள்ளப்படுவோம் என அவர்களில் பாதிபேர் அச்சப்பட்ட

மோடிக்குப் பின்னால்

மோடிக்குப் பின்னால்

அம்பானிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ததுமே பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் கைகோர்த்துக்கொண்டதாக குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், கடந்த ஓராண்டாக பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு பின்னாலும் அம்பானி உள்ளதாகவும், அவரது ( மோடி) பிரசாரத்திற்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? என்றும் கேள்வி எழுப்பினார்.

ராஜினாமா கடிதம்

ராஜினாமா கடிதம்

தொண்டர்களிடையே பேசி முடித்ததும், இரவு 10மணிக்கு துணைநிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்ற கெஜ்ரிவால், அவரிடம் தனது அமைச்சரவையின் பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

டெல்லி சட்டசபைக்குத் தேர்தல்

டெல்லி சட்டசபைக்குத் தேர்தல்

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பதவி விலகியதை தொடர்ந்து, டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து டெல்லி சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்படும்என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

இதனிடையே, ஜன் லோக்பால் மசோதாவை சட்டசபையில் தாக்கல் செய்வதை தடுக்கும் அதிகாரம் டெல்லி ஆளுநருக்கு உள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளது.

English summary
Arvind Kejriwal announces the resignation of AAP government in Delhi, says he will meet Lt Governor Najeeb Jung shortly and ask for the state Assembly to be dissolved. Arvind Kejriwal hands over resignation to L-G
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X