For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங். தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகினார் அசோக் கெலாட்!முதல்வராக நீடிப்பது குறித்தும் சந்தேகம்?

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். மேலும் ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து நீடிப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

Ashok Gehlot not contest Congress President polls

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்தார். சோனியா காந்தி குடும்பத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரும் அசோக் கெலாட்டை முன்னிறுத்தினர். இதனால் அசோக் கெலாட், காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் தேர்தலில் வெல்லும் சாத்தியங்கள் அதிகம் இருந்தன.

இத்தேர்தலில் தாங்களும் போட்டியிடுவதாக சசி தரூர், திக்விஜய்சிங், கமல்நாத் என பலரும் தெரிவித்து இருந்தனர். இதனால் காங்கிரஸ் தலைவர் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வந்தது. அத்துடன் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவரானால் அவர் வகித்து வரும் முதல்வர் பதவி யாருக்கு? என்ற சிக்கலும் எழுந்தது. இது தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸில் பெரும் குழப்பமும் நிலவியது.

இந்நிலையில்தான் அசோக் கெலாட், ஆதரவு எம்.எல்.ஏக்கள் 82 பேர் தனியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சச்சின் பைலட் இல்லாமல் வேறு ஒருவரைத்தான் முதல்வராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். அப்படி சச்சின் பைல்ட் முதல்வராக்கப்பட்டால் தாங்கள் பதவியை ராஜினாமா செய்கிறோம் எனவும் 82 எம்.எல்.ஏக்கள் பதவி விலகல் கடிதம் கொடுத்தனர்.

இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இத்தனைக்கும் அசோக் கெலாட்தான் காரணம் எனவும் கோபப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர காங்கிரஸ் மேலிட பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில்தான் தாம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை; ராஜஸ்தான் முதல்வராக நீடிப்பதை சோனியா காந்தி முடிவு செய்வார்; இந்த விவகாரங்களுக்காக சோனியா காந்திடம் மன்னிப்பு கேட்கிறேன் என கூறியிருக்கிறார் அசோக் கெலாட்.

English summary
Rajasthan Chief Minister Ashok Gehlot said that he will not contest Congress President polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X