சோனியா விசுவாசி.. 46 ஆண்டுகள் பயணித்த காங்கிரஸிலிருந்து விலகினார் அஸ்வனி குமார்.. பரபரப்பில் பஞ்சாப்
அமிருதசரஸ்: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான அஸ்வனி குமார் அக்கட்சியிலிருந்து விலகினார். இவர் 45 ஆண்டுகள் கழித்து காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார்.
மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அஸ்வனி குமார். இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவர் என கருதப்படுகிறது. முன்னாள் அமைச்சர் கபில் சிபலுக்கும் நெருக்கமானவர். அது போல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு விசுவாசமாக இருந்தார்.
பஞ்சாப் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அஸ்வனி குமார் விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்ற தொடர்ந்து அரசியலில் இருப்பேன் என முடிவு செய்துள்ளேன்.

உடல்நலம்
அதன்படி 46 ஆண்டுகால நீண்ட நெடிய பயணத்திற்கு பிறகு நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் கட்சியில் அடிப்படை மாற்றங்கள் செய்ய கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சசி தரூர், முகுல் வாஸ்னிக், ரேணுகா சவுத்ரி, ராஜ் பப்பர் உள்ளிட்ட 23 தலைவர்கள் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

சோனியாவுக்கு ஆதரவு
அப்போது சோனியாவுக்கு ஆதரவாக இருந்தவர் அஸ்வனிகுமார். கட்சியில் உள்ள பிரச்சினைகள், முக்கிய விவகாரங்களை சோனியா காந்தி தலைமையில் மட்டுமே தீர்க்கப்பட முடியும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு கட்சியில் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு அஸ்வனிகுமார் கூறுகையில் எந்த அரசியல் கட்சியும் வேண்டாம் என கருதவில்லை என்றார்.

செயலாளர்
அஷ்வனிகுமார் 1976 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1990 ஆம் ஆண்டு சந்திரசேகர் அரசில் கூடுதல் சொலிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இவரது குடும்பமே அரசியல் குடும்பம். இவரது தந்தை பிரபோத் சந்திரா சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர், எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் பஞ்சாப் சட்டசபை சபாநாயகராகவும் இருந்தவர்.

அஸ்வனிகுமார்
2002 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்ட அஸ்வனிகுமார் அதே பதவியில் 2016 வரை இருந்தார். மத்தியில் காங்கிரஸ் இரு முறை தொடர்ந்து ஆட்சி செய்த போதும் இரு முறையும் அமைச்சராக இருந்தார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னாள் கோவா முதல்வர் லூசின்ஹோ ஃபலேரோ, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகிய இருவர் விலகிவிட்டனர்.

விலகல்
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மூத்த தலைவர் விலகியிருப்பது தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா, ஆர்பிஎன் சிங், சுஷ்மிதா சேவ், பிரியங்கா சதுர்வேதி, லலிதேஷ்பதி திரிபாதி உள்ளிட்ட இளைஞர்களும் கடந்த 2 ஆண்டுகளில் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications