For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து தமிழகத்தைச் சேர்ந்த 31 பேர் பலி

Google Oneindia Tamil News

At least 21 dead as boat capsizes near Port Blair
போர்ட் பிளேர்: காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருந்த 30க்கும் மேற்பட்டோர் சுற்றுலாவாக சென்ற படகு நடுக் கடலில் கவிழ்ந்ததில் 31 பேர் உயிரிழந்தனர்.

அந்தப் படகில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதால்தான் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

ராஸ் தீவுக்கும், நார்த் பே என்ற இடத்துக்கும் இடையே இந்த விபத்து நடந்துள்ளது.

சம்பந்தப்பட்ட படகில் இருந்தவர்களில் பெரும்பாலானாவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள். மும்பையைச் சேர்ந்த சிலரும் படகில் இருந்துள்ளனர். இதுவரை 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படகுக்குக் கீழே மேலும் பல உடல்கள் புதையுண்டுள்ளதாக தெரிகிறது. மொத்தம் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதுகுறித்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணை நிலை ஆளுநர் ஏ.கே.சிங் கூறுகையில், மீட்புப் பணிகள் போர்க்காலஅடிப்படையில் நடந்து வருகின்றன. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போர்ட்பிளேரில்உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

விபத்தில் சிக்கிய அக்வா மெரைன் என்ற அந்தப் படகில் அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே ஏற்றலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகஆட்களை ஏற்றியதால் பாரம் தாங்க முடியாமல்அது கடலில்கவிழ்ந்து விட்டது.

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் அந்தமான் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் அதிர்ச்சி - இரங்கல்

படகு விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அழ்ந்த அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.

English summary
A boat with around 45 people on board capsized in the Bay of Bengal near Port Blair this afternoon, killing at least 21. According to initial reports, the boat, 'Aqua Marine', was carrying mainly tourists including a large group of around 30 people from Kanchipuram in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X