For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடன்கள் தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த அய்யாக்கண்ணு!

விவசாயிகள் கூட்டுறவு வங்களில் வாங்கிய பயிர்க் கடன்களை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு குறித்தான வழக்கில் அய்யாக்கண்ணு, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் டெல்லியில் போராடி வரும் அய்யாக்கண்ணு, கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து வழக்கில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் அனை வரும் வாங்கிய பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; விவசாயிகள் மீது, எந்த சட்ட நடவடிக்கையையும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எடுக்கக்கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

 Ayyakannu filed caveat in supreme court

விவசாயிகளுக்காகப் போராடி வரும் அய்யாகண்ணு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இது டெல்லியில் 23 நாட்களாகப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கும் தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பெரும் மகிழ்சியைக் கொடுத்தது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், அய்யாக்கண்னு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், இந்த வழக்கை விசாரிக்கும்போது, அய்யாக்கண்ணுவையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும். அதற்காகவே இம்மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

English summary
Farmer Ayyakannu filed caveat in supreme court Delhi against Tamilnadu government. Yesterday Madras high court ordered that it cancelled all liabilities of famers' crop loan in cooperative banks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X