For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரலாற்றில் முதல்முறை.. வங்கத்தில் அமலுக்கு வந்த 324 சட்டம்.. தேர்தல் ஆணையம் அதிரடி.. பின்னணி என்ன?

Google Oneindia Tamil News

Recommended Video

    Article 324 in Bengal | வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை! பாஜகவிற்கு குஷி, கவலையில் மமதா- வீடியோ

    கொல்கத்தா: இந்திய வரலாற்றில் முதல்முறையாக மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் 324வது சட்டப்பிரிவை அமல்படுத்தி இருக்கிறது.

    மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது. இந்த தேர்தல் பிரச்சார தடை இன்றோடு அமலுக்கு வருகிறது. இன்று இரவு 10 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் தடைக்கு வருகிறது.

    பாஜக தேசிய தலைவர் அமித் ஷா நேற்று முதல்நாள் மேற்கு வங்கத்தில் பிரம்மாண்ட சாலை பேரணியை நடத்தினார். நேற்று கொல்கத்தா கல்லூரி சாலையில் உள்ள வித்யாசாகர் கல்லூரி அருகே இந்த பேரணி செல்லும் போது பெரிய கலவரம் ஏற்பட்டது.

    அணையப் போகும் திரியின் ஆட்டம்.. டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா கடும் விமர்சனம் அணையப் போகும் திரியின் ஆட்டம்.. டிடிவி தினகரன் குறித்து நமது அம்மா கடும் விமர்சனம்

    சட்டம் அமல்

    சட்டம் அமல்

    இந்த நிலையில்தான் அங்கு பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த தொடர் கலவரங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் 324வது சட்டப்பிரிவை அமல்படுத்தி இருக்கிறது.

    இதுதான் முதல்முறை

    இதுதான் முதல்முறை

    இந்த சட்டம் இந்திய வரலாற்றில் முதல்முறை இப்போதுதான் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு முன் இதுபோன்ற சட்டப்பிரிவு எப்போதும் தேர்தல் ஆணையத்தால் பயன்படுத்தப்படவில்லை. இந்த சட்டப்பிரிவு தேர்தல் நேரத்தில், தேர்தல் ஆணையத்திற்கு அதீத அதிகாரத்தை அளிக்கும்.

     தேர்தல் மேற்பார்வை

    தேர்தல் மேற்பார்வை

    இந்த சட்டப்பிரிவு 324ன் பெயரே ''தேர்தல் மேற்பார்வை,தேர்தல் கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டும் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு முழுக்க முழுக்க வழங்கப்படும்'' என்பதுதான். அதன்படி தேர்தல் ஆணையம் இந்த சட்ட பிரிவு அமல்படுத்தப்பட்ட பின் எந்த விதமான அதிரடி நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். எந்த விதமான அதிரடி நடவடிக்கையும் எடுக்க முடியும்.

     தேர்தல் பிரச்சாரம் தடை

    தேர்தல் பிரச்சாரம் தடை

    இந்த விதி அமலுக்கு வந்த பின் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி இன்று இரவுக்குள் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்பட இருக்கிறது. இது தேர்தல் கட்டுப்பாடு விதிகள் நிறைய உடனடியாக அமலுக்கு வரும். மேற்கு வங்கத்தில் இன்று மாலைக்கு மேல் மது பானங்கள் விற்க முடியாது.

    கட்சிகள் எப்படி

    கட்சிகள் எப்படி

    இன்று இரவுக்கு மேல் கட்சிகள் எந்த விதமான தேர்தல் பேச்சுக்கள், பேட்டிகள், விளம்பரங்கள், விழாக்கள் எதையும் நடத்த முடியாது. தேர்தல் ஆணையம் இந்த குறிப்பிட்ட காலத்தில் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். யாரை வேண்டுமானாலும் உடனடியாக பணி இட மாற்றம் செய்ய முடியும். அதாவது தேர்தல் ஆணையத்திற்கு இது அதிக அதிகாரத்தை அளிக்கும்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தேர்தல் ஆணையம் இந்த அதிகாரத்தை பயன்படுத்தும் என்று மேற்கு வங்க அரசு நினைக்கவில்லை. இதனால் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி நாளை திட்டமிட்டு வைத்து இருந்த அனைத்து பிரச்சாரங்களும் தடைபடும் நிலை ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    English summary
    Ban on Campaign in West Bengal: Election commission imposes Art.324 in the state: Here are the full details about the article.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X